லக்னோ, லக்னோ பால்கன்ஸ் அணியின் கேப்டன் புவனேஷ்வர் குமார், யுபி டி20 லீக் வரலாற்றில் 400 டாட் பந்துகளை வீசிய முதல் பந்துவீச்சாளர் என்ற வரலாற்றுச் சாதனையை படைத்துள்ளார். லக்னோவில் உள்ள ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற நோய்டா கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் புவனேஷ்வர் குமார் இந்த மைல்கல்லை எட்டினார். 4 சீசன்களில் 408 டாட் பால்கள் யுபி டி20 தொடரில் இதுவரை 4 சீசன்களில் 35 போட்டிகளில் விளையாடியுள்ள புவனேஷ்வர் குமார், 124 ஓவர்களில் 408 டாட் பந்துகளை வீசியுள்ளார். சீசன் வாரியாக அவர் வீசிய டாட் பந்துகளின் விவரம்: முதல் சீசன்: 9 போட்டிகளில் 118 டாட் பந்துகள் 2-வது சீசன்: 11 போட்டிகளில் 120 டாட் பந்துகள் 3-வது சீசன்: 10 போட்டிகளில் 117 டாட் பந்துகள் 4-வது சீசன் (நடப்பு): 5 போட்டிகளில் 53 டாட் பந்துகள் மழையால் ஆட்டம் பாதிப்பு நேற்று நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நோய்டா கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்தது. இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய லக்னோ பால்கன்ஸ் அணி 17.3 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது. இதனால் டக்வொர்த்-லூயிஸ்-ஸ்டெர்ன் (DLS) முறையில் லக்னோ பால்கன்ஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/sports/cricket/bhuvneshwar-kumar-becomes-first-bowler-to-reach-400-dot-balls-in-upt20-league-history




