புதுடெல்லி, மத்திய மந்திரி ஜெய்சங்கர், புதுடெல்லிக்கு வருகை தந்துள்ள சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சகத்தின் நிரந்தர செயலாளர் லூக் கோவை சந்தித்து பேசினார். புதிய உறவுக்கு அடித்தளம் மத்திய மந்திரி ஜெய்சங்கர் மற்றும் சிங்கப்பூர் அதிகாரி லூக் கோ ஆகியோர் இடையே நடைபெற்ற இந்த உயர்மட்ட பேச்சுவார்த்தையில், இருநாடுகளின் உறவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. குறிப்பாக பின்வரும் முக்கிய துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டது. நவீன தொழில்நுட்பம் மேம்பட்ட தொழில்நுட்ப துறைகளில் இணைந்து செயல்படுதல். இருநாடுகளின் உற்பத்தித் துறையை மேம்படுத்துதல். உணவு பற்றாக்குறையை போக்க கூட்டு நடவடிக்கை எடுத்தல். உலகளாவிய எரிசக்தி ஓட்டம் மற்றும் ஆற்றல் தேவைகளை பூர்த்தி செய்தல். இது குறித்து மத்திய மந்திரி ஜெய்சங்கர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், இந்த சந்திப்பு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது என்று மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். 19-வது ஆலோசனைக்கூட்டம் லூக் கோவின் இந்திய வருகையையொட்டி, புதுடெல்லியில் 19-வது இந்தியா-சிங்கப்பூர் வெளியுறவு அலுவலக ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு இந்தியாவின் வெளியுறவு அமைச்சக செயலாளர் (கிழக்கு) ருத்ரேந்திர டாண்டன் மற்றும் சிங்கப்பூரின் லூக் கோ ஆகியோர் கூட்டாக தலைமை தாங்கினர். மூலோபாய கூட்டாண்மை இதில் இருநாடுகளின் ‘விரிவான மூலோபாய கூட்டாண்மை’ திட்டத்தின் கீழ் உள்ள 8 முக்கிய இலக்குகள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. உயரதிகாரிகளுடன் சந்திப்புதொடர்ந்து, சிங்கப்பூர் அதிகாரி லூக் கோ இந்திய அரசின் முக்கிய உயரதிகாரிகளையும் சந்தித்து பேசினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/india/meeting-between-indian-foreign-minister-jaishankar-and-singapore-foreign-secretary-luke-goh




