சென்னை விமர்சனம் வருகிறது என்றால் பயப்படாதீங்க என்ற விஜய் சேதுபதியின் பேச்சு மீண்டும் வைரலாகி உள்ளது. 'பிக்பாஸ்' நிகழ்ச்சியின் 10-வது சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். இந்த சீசனில் மொத்தம் 29 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் பிளாக் பாண்டி தலைவராக செயல்பட்டு வந்த நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக அவர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். தொடர்ந்து சாத்திகா, பிக்பாஸ் வீட்டின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த நிகழ்ச்சியில் சாத்திகாவிடம் தலைமைத்துவம் குறித்து விஜய் சேதுபதி கடுமையான அறிவுறுத்தல்களை வழங்கினார். அவர் கூறும்போது, லீடர் மற்றும் லீடர்ஷிப் என்றால் என்னவென்றே தெரியாமல், வாய்க்கு வந்த மாதிரி வாக்குறுதிகளை கொடுத்துவிட்டு, பிரச்சினைகளும் பொறுப்புகளும் வரும்போது எதிரணி மீது பழியை தூக்கிப்போட்டு அங்கிருந்து தெறித்து ஓடுவது லீடருக்கான தகுதி இல்லை. அதற்கு பெயர் ஏமாற்று வேலை என்று கூறினார். நிர்வாகம் விளக்கம் அவருடைய பேச்சு சமூக வலைத்தளங்களில் வைரலாகின. முதல்-அமைச்சர் விஜய்யுடன் தொடர்புப்படுத்தி கருத்துகள் பகிரப்பட்டன. விஜய் சேதுபதி மறைமுகமாக முதல்-அமைச்சரை விமர்சிக்கும் வகையில் அமைந்துள்ளது என பலரும் பதிவிட்டனர். அவருக்கு ஆதரவாகவும் எதிராகவும் சமூக ஊடகங்களில் கருத்துகள் பகிரப்பட்டன. எனினும் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் தனியார் தொலைக்காட்சி நிர்வாகம் அளித்த விளக்கத்தில், பிக் பாஸ் 10 நிகழ்ச்சி, விளையாட்டு சூழலை அடிப்படையாக கொண்டு பொழுதுபோக்கிற்காக நடத்தப்படும் ஒரு நிகழ்ச்சி. இதில் குறிப்பிடும் கருத்துகள் அல்லது சம்பவங்கள், வெளியே இருக்கும் எந்தவொரு தனிநபரையோ அல்லது அமைப்பையோ குறித்து கூறும் கருத்துகளாக எடுத்து கொள்ள கூடாது. மீண்டும் வைரல் நிகழ்ச்சியில் அனைத்தும் பொழுதுபோக்கு நோக்கத்துடன் மட்டுமே நடத்தப்படுகின்றன என்று புரிந்துகொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், நிகழ்ச்சியில் நடிகர் விஜய் சேதுபதி பிக் பாஸ் பங்கேற்பாளர்களிடம் பேசிய பேச்சு மீண்டும் வைரலாகி உள்ளது. அவர் பேசும்போது, உங்களை நோக்கி விமர்சனம் வருகிறது என்றால் அதனை ரிசீவ் பண்ணுங்க (உள்வாங்குங்கள்). அதுதான் மெச்சூரிட்டி (பக்குவம்). விமர்சனங்களை கண்டு பயப்படாதீங்க என பிக் பாஸ் நிகழ்ச்சியில் பேசிய நடிகர் விஜய் சேதுபதியின் பேச்சு மீண்டும் வைரலாகி உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/cinema/cinemanews/dont-fear-criticism-vijay-sethupathi-viral-speech




