சென்னை, ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறவில்லை; தவெக அரசு மீது தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;- கூட்டுப்பாலியல் தஞ்சை பேராவூரணி அருகே கோவில் திருவிழாவிற்கு சென்ற 16 வயது சிறுமியை நான்கு பேர் கொண்ட கும்பல் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாக வெளியாகியுள்ள செய்திகள் நெஞ்சைப் பதறச் செய்கின்றன. பாதிக்கப்பட்ட சிறுமி முழு மன மற்றும் உடல் நலத்துடன், இக்கொடுமையை கடந்து வர இறைவனிடம் பிரார்த்தித்து கொள்கிறேன். முடங்கிக்கிடக்கிறது ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறவில்லை என்பது போல,முதல்-அமைச்சர் விஜய் தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்றதில் இருந்து பெண்களின் பாதுகாப்பிலோ, சீரழிந்து கிடக்கும் சட்டம் ஒழுங்கிலோ, சமூக கட்டமைப்பிலோ எவ்வித முன்னேற்றமும் நிகழவில்லை. பெண்கள் பாதுகாப்பிற்கென உருவாக்கப்பட்ட “சிங்கப்பெண்கள் சிறப்பு பாதுகாப்பு படை”, முறையான வழிகாட்டுதல் இன்றி எங்கே எந்த மூலையில் முடங்கிக் கிடக்கிறது என்று தெரியவில்லை. பெண் பிள்ளைகளை பெற்றவர்கள் வயிற்றில் நெருப்பை கட்டி கொண்டு தவிக்கிறார்கள். வெட்கக்கேடு ஆனால், அதை பற்றி எந்தக் கவலையும் இல்லாத முதல்-அமைச்சரும் அவரது அமைச்சர்களும், சாலைகள் முழுவதும் வெற்று விளம்பரங்களை நிரப்புவதிலும், சமூக வலைத்தளங்கள் முழுவதும் விதவிதமான ரீல்ஸ்களை பரப்புவதிலும் மட்டுமே கவனம் செலுத்தி கொண்டிருப்பது வெட்கக்கேடு. பதவி விலகிவிடலாம்! “மாற்றம்” என்ற பெயரில் மக்களுக்கு தினசரி ஏமாற்றத்தை அளித்து கொண்டிருக்கும் முதல்-அமைச்சர் விஜய், தனது நிர்வாக தோல்வியை ஒப்புக்கொண்டு மொத்தமாக பதவி விலகிவிடலாம்! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/regime-change-no-change-in-scenes-nainar-nagendran-slams-tvk-government




