தனுஷ் பிறந்தநாளையொட்டி, ‘ஓம்’ திரைப்பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி புதிய போஸ்டரை வெளியிட்டு வாழ்த்தியுள்ளார். தனுஷ் இன்று தனது 43-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதையொட்டி அவருக்கு திரை பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நடிகர் தனுஷ் தற்போது ‘ஓம்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து, ‘லப்பர் பந்து’ இயக்குநர் இயக்கத்திலும் வெற்றி மாறன் இயக்கும் ‘தமிழ் முருகன்’ திரைப்படத்திலும் நடிக்க உள்ளார். நடிகர் தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு, திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் அவரது ரசிகர் மன்றம் சார்பில் ரத்த தானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் முகாம் நடைபெற்றது. இந்த நிலையில், ‘ஓம்’ திரைப்பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி புதிய போஸ்டரை வெளியிட்டு வாழ்த்தியுள்ளார். போஸ்டரில் ‘தலைவர் தனுஷ்’ என குறிப்பிடப்பட்டுள்ளது. இப்போஸ்டரை இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி பகிர்ந்ததால் பலரும் அரசியலுக்குத் தனுஷ் வரப்போகிறார் என வாழ்த்தி வருகின்றனர். தனது பிறந்தநாளை முன்னிட்டு போயஸ் கார்டன் வீட்டின் முன் திரண்ட ரசிகர்களை தனுஷ் சந்தித்து வாழ்த்து பெற்றார். ரசிகர் மன்ற கொடி நடிகர் தனுஷ் தனது ரசிகர் மன்றத்திற்கு தனி கொடி அறிமுகப்படுத்தி உள்ளார். அவருக்கும் அரசியல் ஆசை இருக்கிறது என்று தகவல் பரவியது. அந்த கொடி சமூக வலைதளத்தில் வைரல் ஆனது. எண்ணம் போல் வாழ்க்கை, எண்ணம்போல் தான் வாழ்க்கை என்ற வாசகமும் அந்த கொடி டிசைனில் இருந்தது. நடிகர் தனுஷ் அறிமுகப்படுத்தியதாக சொல்லப்பட்ட ரசிகர் மன்றக் கொடி பற்றி சமூக வலைத்தளத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. விஜய் நடிகராக இருந்தபோது ரசிகர் மன்றக்கொடி இப்படித்தான் அறிமுகப்படுத்தப்பட்டது ரசிகர்களை சந்திக்கும் தனுஷ் சமீப காலங்களில் தனுஷ் ரசிகர் மன்றத்தில் அதிக அக்கறை காட்டி வருகிறார். மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை ஏரியா வாரியாக ரசிகர்களை வரவழைத்து அவர்களோடு புகைப்படம் எடுத்துக்கொண்டு உணவளித்து உபசரித்து வருவது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/cinema/cinemanews/dhanushs-birthday-director-wishes-by-releasing-thalaivar-dhanush-poster




