மெல்போர்ன், ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நஜ்முல் ஹூசைன் ஷன்டோ தலை மையிலான வங்காளதேச கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடு கிறது. இதன்படி ஆஸ்திரேலியா-வங்காளதேசம் இடையிலான முதலாவது டெஸ்ட் டார்வினில் நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்குட்பட்டது என்பதால் அந்த வகையில் இந்த போட்டி முக்கியத்துவம் பெறுகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் 87.50 சதவீத புள்ளியுடன் முதலிடம் வகிக்கும் ஆஸ்திரேலியா அந்த நிலையை வலுப்படுத்திக் கொள்ள தீவிரமாக உள்ளது. அதனால் தான் கேப்டன் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஹேசில்வுட், ஸ்காட் போலன்ட், நாதன் லயன். டிராவிஸ் ஹெட், ஸ்டீவன் சுமித், அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன், லபுஸ்சேன், வெப்ஸ்டர், ஜேக் வெதரால்டு என முழுமையான அணியை ஆஸ்திரேலியா களம் இறக்குகிறது. அவர்க ளிடம் வங்காளதேசம் தாக்குப்பிடிப்பது கடினம் தான். ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய லெவ னுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் வங்காளதேசம் 2-வது இன்னிங்சில் 54 ரன்னில் சுருண்டு தோற்றது. கேப்டன் ஷன்டோ, மொமினுல் ஹக், முஷ்பிகுர் ரஹிம், லிட்டான் தாஸ், மெஹிதி ஹசன் மிராஸ் உள்ளிட்ட பேட்ஸ்மேன்கள் கைகொடுத்தால் ஓரளவு சவால் அளிக்க முடியும். இவ்விரு அணிகள் இதுவரை 6 டெஸ்டுகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 5-ல் ஆஸ்திரேலியாவும், ஒன்றில் வங்காளதேசமும் வெற்றி பெற்றுள்ளன. 2003-ம் ஆண்டுக்கு பிறகு ஆஸ்திரேலிய மண்ணில் வங்காளதேசம் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆடுவது இதுவே முதல் முறையாகும். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/sports/cricket/first-test-australia-vs-bangladesh-clash-tomorrow




