டாக்கா, வங்காளதேச கிரிக்கெட் வாரியம் (BCB), அனைத்து வடிவங்களுக்கும் ஒரே கேப்டன் என்ற நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைத்து, மீண்டும் ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு தனித்தனி கேப்டன்களை நியமிக்கத் தயாராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விவகாரம் வங்காளதேச கிரிக்கெட் வாரியத்தின் இயக்குநர்கள் கூட்டத்தில் ஆலோசனைக்கு வர உள்ளது. தற்போது டி20 அணியின் கேப்டனாக இருக்கும் லிட்டன் தாஸ், ஒருநாள் அணிக்கும் கேப்டனாக நியமிக்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. கிரிக்கெட் வாரியத்தின் ஒப்புதல் கிடைத்தால், அவர் மெஹிதி ஹசன் மிராஸுக்கு பதிலாக ஒருநாள் அணியை வழிநடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளையில், நஜ்முல் ஹொசைன் சாண்டோ டெஸ்ட் அணியின் கேப்டனாக தொடர்ந்து செயல்படுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஆலோசனை கூட்டத்திற்குப் பிறகு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/sports/cricket/bangladesh-cricket-board-plans-to-appoint-separate-captains




