சென்னை, மத்திய பா.ஜ.க அரசின் மக்கள் தொகையியல் மாற்றங்கள் குறித்த உயர்நிலைக் குழுவை உடனடியாகக் கலைக்க வேண்டும் எனவும் தமிழக அரசு மத்திய அரசுக்கு உடனடியாக கடிதம் எழுதிட வேண்டும் எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம் இது தொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;- மத்திய உள்துறை அமைச்சகத்தால் அமைக்கப்பட்டுள்ள மக்கள்தொகையியல் மாற்றங்கள் குறித்த உயர்நிலைக் குழுவின் (High Level Committee on Demographic Changes) 35 அம்சக் கேள்வித்தாள், ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க-வின் சிறுபான்மையினருக்கு எதிரான உள்நோக்கத்தை அப்பட்டமாக அம்பலப்படுத்தியுள்ளது. நாட்டின் கூட்டாட்சி தத்துவத்திற்கும், சமூக நல்லிணக்கத்திற்கும் பெரும் சவாலாக மாறியுள்ள மத்திய அரசின் இந்த ஆபத்தான முயற்சியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. ஏற்கனவே, நாடு முழுவதும் அதிகாரப்பூர்வ மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் பணிகள் நிலுவையில் இருக்கும் வேளையில், அதற்கு இணையாக சட்டத்திற்குப் புறம்பான வகையில் இப்படி ஒரு புதிய குழுவை அமைத்துத் தரவுகளைத் திரட்டுவது பிஜேபியின் விஷமத்தனத்தை வெளிப்படுத்துகிறது. மாநிலங்களிடம் மதம் சார்ந்த கல்வி சேர்க்கை, நில உரிமை மாற்றங்கள், பழங்குடியின மக்கள் மதமாற்றம் மற்றும் வாக்காளர் பதிவு போன்ற விபரங்களை மதம் வாரியாக இக்குழு கேட்பது முழுக்க முழுக்க அரசியல் உள்நோக்கம் கொண்டது. மத்திய அரசுக்கு கடிதம் குறிப்பாக, வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட வாக்காளர்களின் மதம் குறித்த விபரங்களை இக்குழு சேகரிப்பது, இந்த குழுவில் ஒரு மக்கள்தொகையியல் நிபுணர் கூட இல்லை என்பது பாஜகவின் உள்நோக்கத்தை நன்கு வெளிப்படுத்துகிறது. சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் (SIR), மக்கள் தொகை கணக்கெடுப்பு, தொகுதி மறுவரையறை (Delimitation) ஆகியவற்றுடன் இந்த மக்கள்தொகையியல் குழுவின் செயல்பாடுகளையும் இணைத்துப் பார்க்கும்போது, இது இந்நாட்டின் மதச்சார்பின்மைக்கு எதிரான கார்ப்பரேட் இந்துத்துவா அரசின் சதி என்பது தெளிவாகிறது. மாநில உரிமைகளைப் பறிக்கும் மத்திய பா.ஜ.க அரசின், இந்த மக்கள்தொகையியல் உயர்நிலைக் குழுவின் (HLCDC) ஆபத்தான நகர்வுகளைக் கண்டித்து தமிழ்நாட்டின் முதல்-அமைச்சர் உடனடியாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதி வெளியிட வேண்டும். தமிழக வெற்றிக் கழக அரசாங்கம், மாநில சுயாட்சியைக் காக்க இக்குழுவின் கேள்வித்தாளை நிராகரித்து, அதன் உள்நோக்கத்தை பகிரங்கமாக எதிர்க்க வேண்டும். கூட்டாட்சிக்கு எதிரான மாநில உரிமைகளைப் பறிக்கும் மக்கள்தொகையியல் மாற்றங்கள் குறித்த குழுவிற்குத் தமிழ்நாடு அரசு எவ்விதத் தரவுகளையும் வழங்கி ஒத்துழைக்கக் கூடாது. எனவே, மத்திய அரசு மேற்கொண்டுள்ள இந்தத் திட்டமிட்ட சதியை உடனடியாகக் கைவிட வேண்டுமென்றும், இந்த மக்கள்தொகையியல் குழுவை முற்றிலுமாகத் திரும்பப் பெற வேண்டுமென்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு வலியுறுத்துகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/high-level-committee-on-demographic-changes-must-be-dissolved-p-shanmugam-urges




