விஜய்யின் 'ஜனநாயகன்' திரைப்படம் நாளை மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் திரையரங்குகளில் வெளியாகிறது. அ. வினோத் இயக்கியிருக்கும் இப்படம் தெலுங்கில் பாலகிருஷ்ணா நடிப்பில் வெளிவந்த 'பகவந்த் கேசரி' படத்தின் ரீமேக்தான். Jana Nayagan - Vijay ஆனால், இந்த ரீமேக்கில் சில புதிய விஷயங்களையும் ஹெச்.வினோத் சேர்த்திருக்கிறார். இப்படம் நாளை வெளியாகவிருக்கும் நிலையில், இத்தகவலைப் பேட்டியில் பகிர்ந்திருக்கிறார் 'பகவந்த் கேசரி' இயக்குநர் அனில் ரவிபுடி. அவர், "ஹைதராபாத்தில் வெங்கட் பிரபு சாரின் 'GOAT' படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. அப்போதொரு நாள் திடீரென ஜெகதீஷ் சாரின் குழுவிலிருந்து என்னை அழைத்தார்கள். 'நீங்கள் ஒருமுறை விஜய் சாரைப் பார்க்க வேண்டும்' என்று சொன்னார்கள். எனக்கு ஒரே ஆச்சர்யம்! 'திடீரென என்ன விஷயம்?' என்று யோசித்தபடியே, கையில் இருந்த வேலைகளையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு உடனடியாக அவரைப் பார்க்க ஓடினேன். Anil Ravipudi - Jana Nayagan அவரது வேனிட்டி வேனுக்குள் சென்று சுமார் 15 நிமிடங்கள் அவருடன் அமர்ந்து பேசினேன். அவர் என்னை எதற்காகக் கூப்பிட்டார் என்றால். 'நான் பகவந்த் கேசரி திரைப்படத்தைப் பார்த்தேன், எனக்கு மிகவும் பிடித்திருந்தது. படத்தை அற்புதமாக எடுத்திருக்கிறீர்கள்! குறிப்பாகச் சில காட்சிகளும் தருணங்களும் இன்னும் என்னை விட்டு விலகாமல் மனதிலேயே நிற்கின்றன. அதற்காக உங்களைப் பாராட்டத்தான் கூப்பிட்டேன்' என்றார். அதைக் கேட்டதும் எனக்கு அளவற்ற மகிழ்ச்சி! அங்கிருந்து கிளம்பிய உடனே மகேஷ் பாபு சாருக்குத் தொடர்புகொண்டு, 'சார், இப்போதுதான் விஜய் சாரைச் சந்தித்தேன். என் படத்தைப் பார்த்துவிட்டு ரொம்பவே பாராட்டிப் பேசினார்' என்று அந்த மகிழ்ச்சியை அவரிடமும் பகிர்ந்துகொண்டேன்" என்றார். Jana Nayagan: 24 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்துக்கு 'A' சான்றிதழ்; ரிலீசுக்குத் தயாராகும் ஜனநாயகன் முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://cinema.vikatan.com/tollywood/anil-ravipudi-interview-vijay-meeting-goat-sets-bhagavanth-kesari




