சென்னை, அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;- “தமிழக முதல்-அமைச்சர் விஜய் லண்டன் பயணத்தின்போது நடிகர் அஜித்தை சந்தித்தது பண்பாடு. அதில் விமர்சிக்க ஒன்றுமில்லை. ஆனால் முதல்-அமைச்சர் விஜய்யின் லண்டன் பயணத்தால் கிடைத்த பயன் என்ன? என்பது குறித்து தமிழக மக்களிடம் தெரிவிக்க வேண்டும். லண்டனில் ஈர்க்கப்பட்ட முதலீடுகள் குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். இருதரப்பு ஒப்பந்தங்கள் எப்போது கையெழுத்தாகும்? திட்டங்கள் எப்போது செயல்பாட்டுக்கு வரும்? இந்த முதலீடுகளின் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் எத்தனை பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும்? என்ற விவரங்கள் அடங்கிய வெளிப்படையான வெள்ளை அறிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டும்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/the-tamil-nadu-government-should-release-a-white-paper-on-the-investments-attracted-in-london-former-minister-jayakumar




