இன்ஸ்டாகிராமில் ஒருமுறை ஒரு வகை ரீல்ஸ் வீடியோக்களை பார்த்தாலோ, லைக் செய்தாலோ, அதே மாதிரியான வீடியோக்களையே தொடர்ந்து பரிந்துரைக்கும். அதை மாற்ற கன்டென்ட் பிரிபெரென்ஸ் என்பதைத் தேர்வு செய்து புதிய விருப்பங்களுக்கு ஏற்ப மாற்றி கொள்ளலாம். இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களை பயன்படுத்தாதவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அந்த அளவுக்கு இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மக்களின் அன்றாட வாழ்க்கையில் முக்கிய இடத்தை பிடித்துள்ளன. குறிப்பாக, குறுகிய நேரத்தில் சுவாரஸ்யமான தகவல்களையும் பொழுதுபோக்கு அம்சங்களையும் வழங்கும் இன்ஸ்டா ரீல்ஸ், பயனர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இதனால், இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பார்ப்பவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஒரே மாதிரியான ரீல்ஸ் அந்த இன்ஸ்டாகிராமில் ஒருமுறை ஒரு வகை ரீல்ஸ் வீடியோக்களை பார்த்தாலோ, லைக் செய்தாலோ, அதே மாதிரியான வீடியோக்களையே தொடர்ந்து பரிந்துரைக்கும். இதனால், பிடிக்காத, தொடர்பில்லாத, பொது இடங்களில் பார்க்க முடியாத ரீல்ஸ் வீடியோக்கள் அதிகமாக தோன்றும். இதைச் சரிசெய்ய இன்ஸ்டாகிராம், ரீசெட் சஜெஸ்டட் கன்டென்ட் (Reset Suggested Content) என்ற வசதியை வழங்குகிறது. இதன் மூலம் பழைய பரிந்துரைகளை நீக்கிவிடலாம். ரீசெட் சஜெஸ்டட் கன்டென்ட் இன்ஸ்டாகிராம் செயலியைத் திறந்து புரொபைல் பகுதிக்குச் செல்லுங்கள். மேல் வலது மூலையில் உள்ள மூன்று கோடுகள் ஐகானை தட்டுங்கள். கன்டென்ட் பிரிபெரென்ஸ் என்பதைத் தேர்வு செய்யுங்கள். ரீசெட் சஜெஸ்டட் கன்டென்ட் என்பதைத் தட்டி, அதை உறுதிப்படுத்துங்கள். இதன் பிறகு, உங்கள் ரீல்ஸ் பரிந்துரைகள் படிப்படியாக மாறத் தொடங்கும். புதிய விருப்பங்களுக்கு ஏற்ப இன்ஸ்டாகிராம் மீண்டும் அல்காரிதத்தை உருவாக்கும். ஒருமுறை ரீசெட் செய்த பிறகு அதை மீண்டும் பழைய நிலைக்கு மாற்ற முடியாது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/world/do-you-see-glamorous-reels-on-instagram-you-can-change-that-with-just-one-click




