டெல்லி, தலைநகர் டெல்லியின் நரிலா பகுதியிலுள்ள சாலையோரம் இன்று காலை ஊர்மிளா என்ற 70 வயது மூதாட்டி நடந்து சென்றுகொண்டிருந்தார். விபத்து - மூதாட்டி பலி அப்போது, அவ்வழியாக வேகமாக வந்த சொகுசு கார் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த வேன் மீது மோதியது. பின்னர், சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த மூதாட்டி ஊர்மிளா மீதும் மோதியது. இந்த கோர விபத்தில் மூதாட்டி ஊர்மிளா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், விபத்தை ஏற்படுத்திய சொகுசு கார் டிரைவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவரது பெயர் சுபம் என்பதும் இவரது தந்தை அரியானா மாநில காவல் துறையில் சப் இன்ஸ்பெக்டராக செயல்பட்டு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, கைது செய்யப்பட்ட சுபம் சிறையில் அடைக்கப்பட்டார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/india/sub-inspector-son-car-accident-elderly-woman-killed-shocking-incident




