சென்னை, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீ கங்காநகரில் இருந்து திருச்சி வரும் ஹம்சபர் எக்ஸ்பிரஸ் ரெயிலில்(வண்டி எண்.22497) வருகிற 31-ந்தேதி வரையிலும், மறுமார்க்கமாக, திருச்சியில் இருந்து ஸ்ரீ கங்காநகர் செல்லும் ஹம்சபர் எக்ஸ்பிரஸ் ரெயிலில்(22498) வருகிற செப்டம்பர் 4-ந்தேதி வரையிலும் தற்காலிகமாக ஒரு 3-வது வகுப்பு ஏ.சி பெட்டி இணைத்து இயக்கப்படுகிறது. இதேபோல, ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இருந்து திருச்சி வரும் ஹம்சபர் எக்ஸ்பிரஸ் ரெயிலில்(20481) நாளை (6-ந்தேதி) முதல் 26-ந்தேதி வரையிலும், மறுமார்க்கமாக, திருச்சியில் இருந்து ஜோத்பூர் செல்லும் ஹம்சபர் எக்ஸ்பிரஸ் ரெயிலில்(20482) வருகிற 8-ந்தேதி முதல் 29-ந்தேதி வரையிலும் தற்காலிகமாக ஒரு படுக்கை வசதி பெட்டி இணைத்து இயக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/southern-railway-announces-the-attachment-of-an-additional-coach-to-the-trichy-jodhpur-humsafar-express




