Vollständiger Artikel
ஜப்பானை சேர்ந்த ஃபுட்டோஸி இட்டோ என்பவர் மதுரையை சேர்ந்த சரவணனுடன் இணைந்து ‘ரிக் வீல்ஸ்’ என்கிற பெயரில் ரயில் பொம்மைகளை தயாரித்து விற்பனை செய்துவருகிறார். தங்களுடைய தொழில் சில நிறுவனங்களால் பாதிப்பட்டுள்ளதாகவும், அதை சரிசெய்ய வேண்டுமென தன்னுடைய சமூக வலைதளப்பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார் ஃபுட்டோஸி இட்டோ. அதில், “நானும், மதுரையை சேர்ந்த சரவணன் என்பவரும் இணைந்து ரிக் வீல் (RIG WHEELS TOY PRIVATE LIMITED) என்ற ஸ்டார்ட் அப் நிறுவனத்தைத் தொடங்கி நடத்தி வருகிறோம். தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி மற்றும் இந்தியாவின், மேக் இன் இந்தியா (MAKE IN INDIA) கனவை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்ற நோக்கத்துடன் முழுக்க முழுக்க இந்தியாவிலேயே பொம்மைகளை தயாரித்து விற்பனை செய்து வருகிறோம். எங்களது பொம்மைகள் தயாரிப்பிற்குத் தேவையான அச்சுகளை சொந்தமாக உருவாக்குவதற்கான தொகையை முழுமையாகச் செலுத்தி, அனைத்து பணிகளையும் முடித்துள்ளோம். ஆனால் கோயம்புத்தூரில் உள்ள சில நிறுவனங்கள் எங்களுக்குச் சொந்தமான அந்த அச்சுகளை சட்டவிரோதமாக தங்களிடம் வைத்துக்கொண்டு, கூடுதல் பணம் கேட்டு வருகின்றன. அந்த அச்சுகள் சட்டபூர்வமாக எங்களுக்குச் சொந்தமானவை என்பதை நிரூபிக்கும் அனைத்து ஆவணங்களும், ஆதாரங்களும் எங்களிடம் உள்ளன. கடந்த ஆறு மாதங்களாக காவல்துறை மற்றும் நீதிமன்றத்தை நாடியிருந்தாலும், இதுவரை இந்தப் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கவில்லை. இதன் காரணமாக எங்களது ஸ்டார்ட் அப் நிறுவனம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. உற்பத்தி முடங்கியுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக நான் மதுரையில் தங்கி கடுமையாக உழைத்து இந்த நிறுவனத்தை உருவாக்கி வருகிறேன். தமிழ்நாட்டில் அதிமான தொழில் செய்வதற்கான வாய்ப்புகளும், திறமையான நபர்களும் உள்ளனர். ஆனால் சில நிறுவனங்களின் பேராசையால் எங்களுடைய தொழில் முடங்கியுள்ளது. எங்களுக்குச் சொந்தமான அச்சுகளை மீட்டெடுத்து, எங்களது உற்பத்தியை மீண்டும் தொடங்குவதற்கு தமிழ்நாடு தொழிற்துறை அமைச்சர் கீர்த்தனா உதவி செய்ய வேண்டும். இந்தப் பிரச்னைக்கு முற்றுபுள்ளி வையுங்கள்” என பேசியுள்ளார். இது குறித்து ‘ரிக் வீல்ஸ்’ நிறுவனத்தின் நிறுவனர் சரவணனிடம் விளக்கம் கேட்டோம், “ இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது கொஞ்சம் பொறுங்கள் ” என முடித்து கொண்டார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständiger Artikel — Link unten



