ரியாத் சவுதி அரேபியாவில் ஈரான் கடற்கொள்ளையர்கள் நடத்திய துப்பாக்கி சூடு சம்பவத்தில் தமிழக மீனவர் பலியாகி உள்ளார். சவுதி அரேபியாவில், ஈரான் எல்லையை ஒட்டிய கடற்பகுதிகளில் தனியார் நிறுவனங்களின் சார்பில், தமிழகத்தின் பல பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும், ஈரான் கடற்கொள்ளையர்கள் மற்றும் கடலோர காவல் படையினர் அவ்வப்போது அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி வருகின்றனர். இதில், தமிழக மீனவர்கள் பலியாகும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. தமிழக மீனவர் பலி இந்த நிலையில், சவுதி அரேபியாவில் தமிழகத்தின் மயிலாடுதுறையை சேர்ந்த சிலர் மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளனர். அவர்களை நோக்கி ஈரான் கடற்கொள்ளையர்கள் சிலர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இதில் மாவீரன் என்ற தமிழக மீனவர் ஒருவர் பலியாகி உள்ளார். இதுதவிர, கீழமூவர்கரையை சேர்ந்த சங்கர் உட்பட 3 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். அவர்கள் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/world/iranian-pirates-open-fire-in-saudi-arabia-tamil-nadu-fisherman-killed




