ஈரோடு, தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை சில தினங்களில் தொடங்க உள்ள நிலையில், வெள்ள பாதிப்பு ஏற்படக் கூடிய இடங்களில் முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், பருவமழை முன்னெச்சரிக்கையாக ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே பவானி ஆற்றில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது குறித்த ஒத்திகை நடைபெற்றது. இந்த ஒத்திகையின்போது தீயணைப்பு வீரர்கள் ஆற்றில் இறங்கி, நீரில் மூழ்கியவர்களை பிளாஸ்டிக் கேன், ரப்பர் டியூப் போன்றவற்றின் உதவியுடன் எவ்வாறு மீட்பது என்பது குறித்து செயல்விளக்கம் அளித்தனர். தொடர்ந்து, மீட்கப்பட்டவருக்கு முதலுதவி அளிப்பது மற்றும் பேரிடர் கால மீட்புப் பணி குறித்து பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு தீயணைப்புத்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/northeast-monsoon-preparedness-fire-and-rescue-services-personnel-conduct-flood-rescue-drill-in-the-bhavani-river




