நெல்லை, காரை மோத விட்டு. நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே மூலச்சி கிரா மத்தைச் சேர்ந்தவர் சித்திரபுத்திரன் மகன் காளிமுத்து (வயது 40). விவசாயியான இவர் கடந்த 2-ந்தேதி மாலையில் தனது மகன்கள் சின்னத்துரை (15), ஜெயராஜ் (5) ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் சென்றார். வீரவநல்லூர் அருகே மாதுடையார்குளம் பகுதியில் சென்ற போது, அவர்களை பின்தொடர்ந்து வாகனங்களில் வந்த மர்ம கும்பல் திடீரென்று காரை காளிமுத்துவின் மோட்டார் சைக்கிளின் மீது பயங்கரமாக மோதி இடித்து தள்ளியது. இரட்டைக்கொலை இதில் சிறுவன் ஜெயராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். காளிமுத்துவை சரமாரியாக வெட்டிக்கொலை செய்த கும்பல், அவரது தலையை துண்டித்தது. சிறுவன் சின்னத்துரையின் காலிலும் அரிவாளால் வெட்டி விட்டு கும்பல் தப்பியது. மேலும் காளிமுத்துவின் தலையை கரம்பை மெயின் ரோட்டில் வைத்து சென்றது. நெல்லையை உலுக்கிய இரட்டைக்கொலை குறித்து வீரவநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கொலையாளிகளை பிடிப்பதற்காக போலீசார் 9 தனிப்படைகள் அமைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். 3 பேர் அதிரடி கைது போலீசாரின் விசாரணையில், கடந்த 2006-ம் ஆண்டு உறவினர்களாக இருந்த ஒரே சமூகத்தைச் சேர்ந்த இரு குடும்பத்தி னர் தெருக்குழாயில் தண்ணீர் பிடித்தபோது ஏற்பட்ட மோதல் கடந்த 20 ஆண்டுகளாக தொடர்வதும், இதில் இதுவரை இரு தரப்பைச் சேர்ந்த 7 பேர் கொலை செய்யப்பட்ட நிலையில், தற்போது தந்தை-மகன் படுகொலை செய்யப்பட்டதும் தெரியவந்தது. இதுதொடர்பாக 11 பேர் மீது போலீசார் வழக்குப்ப திவு செய்து, தலைமறைவான அவர்களை வலைவீசி தேடினர். இந்த வழக்கில் தொடர்புடைய மூலச்சி கிராமத்தைச் சேர்ந்த மகேந்திரன் என்ற மகேஷ் (29), குமார் என்ற கொக்கி குமார் (23), ஊர்காடு பகுதியைச் சேர்ந்த முத்துச்செல்வன் (29) ஆகிய 3 பேரை போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்தனர். மேலும் 4 பேர் கைது மேலும் தலைமறைவான 8 பேரை வலைவீசி தேடி வந்த நிலையில், தற்போது மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மணிகண்டன், ராஜதுரை, முத்துப்பட்டன், மகாலிங்கம் ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையாளிகள் அனைவரையும் கைது செய்தால்தான் தந்தை-மகன் உடல்களை பெற்றுக் கொள்வோம் என்று குடும்பத்தினர், உறவினர்கள் தெரிவித்ததால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது. இதனால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/4-more-people-arrested-in-double-murder-case-that-shook-the-paddy-field




