கேளம்பாக்கம், அடுக்குமாடி குடியிருப்பின் 8-வது மாடியில் இருந்து குதித்து பிளஸ்-1 மாணவி தற்கொலை செய்து கொண்டார். பிளஸ்-1 மாணவி செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தை அடுத்த ஏகாட்டூர் பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் 8-வது மாடியில் வசித்து வருபவர் அஜிஸ். இவரது மகள் சபியா (வயது 16). இவர், அதே வளாகத்தில் உள்ள பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். சபியா, பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்ததும் செல்போனில் 'இன்ஸ்டாகிராம்' பயன்படுத்தி வந்ததாகவும், இதனை பெற்றோர் கண்டித்ததாகவும் தெரிகிறது. நேற்று மாலை மீண்டும் செல்போன் பயன்படுத்தியதை அவரது தாயார் கண்டித்ததாக கூறப்படுகிறது. 8-வது மாடியில் இருந்து. இதனால் விரக்தி அடைந்த சபியா, அடுக்குமாடி குடியிருப்பின் 8-வது மாடியில் இருந்து கீழே குதித்தார். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த கேளம்பாக்கம் போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/kelambakkam-plus-1-student-commits-suicide-by-jumping-from-8th-floor




