நடிகர் மோகன்லாலின் மகள் விஸ்மயா மோகன்லால், இயக்குநர் ஜூட் அந்தனி ஜோசப் இயக்கத்தில் உருவாகியுள்ள 'துடக்கம்' திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகியுள்ளார். இந்தப் படம் நேற்றைய தினம் திரையரங்குகளில் வெளியானது. Thudakkam Movie தன் மகள் சினிமாவில் அறிமுகமாகியிருப்பது குறித்து நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை போட்டிருக்கிறார் மோகன்லால். அந்தப் பதிவில் அவர், "ஒரு தகப்பனின் மனதுக்கு இதைவிட வேறு என்ன வேண்டும்? விஸ்மயா தனது திரைப் பயணத்தை 'துடக்கம்' படம் மூலம் தொடங்குவதைப் பார்ப்பதும், அவளுக்கு நீங்கள் காட்டும் அன்பைப் பார்ப்பதும் நான் என்றும் போற்றிப் பாதுகாக்க வேண்டிய ஆசீர்வாதம்" எனக் குறிப்பிட்டிருக்கிறார். Mohanlal Family Photo தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூரின் மகன் ஆஷிஷ் ஜோ ஆண்டனி கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளது குறித்து, "சிறுவயதிலிருந்தே எனக்கு நன்கு தெரிந்த, நான் நேசித்த ஆஷிஷ் ஜோ ஆண்டனி, விஸ்மயாவுடன் இணைந்து இந்த அழகிய பயணத்தைப் பகிர்ந்துகொள்வதைப் பார்க்கும்போது என் மனம் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறது. இவர்கள் இருவரையும் இவ்வளவு அன்போடு ஏற்றுக்கொண்டதற்கு உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி" எனப் பதிவிட்டுள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://cinema.vikatan.com/mollywood/mohanlal-emotional-post-daughter-vismaya-thudakkam-debut




