மதுரை, மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் கும்பாபிஷேக விழா வருகிற 6-ந் தேதி தொடங்குகிறது. விழா நிகழ்ச்சிகள் விவரம் அறிவிக்கப்பட்டு உள்ளன. கும்பாபிஷேக விழா மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா அடுத்த மாதம் (செப்டம்பர்) 17-ந் தேதி வெகு விமரிசையாக நடக்கிறது. விழா ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன. விழா ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் நிஷாந்த் கி ருஷ்ணா தலைமையில் போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன், போலீஸ் சூப்பிரண்டு தேவநாதன், மாநகராட்சி கமிஷனர் கவுரவ்குமார் ஆகியோர் முன்னிலையில் நேற்று நடந்தது. கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா தலைமையில் நடைபெற்ற ஆலோசனை விழா நிகழ்ச்சிகள் கூட்டத்தில் கும்பாபிஷேக நிகழ்ச்சி விவரம் அறிவிக்கப்பட்டது. அதாவது, “மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா அடுத்த மாதம் 6-ந் தேதி தொடங்கி அக்டோபர் மாதம் 2-ந் தேதி வரை நடைபெறுகிறது. 6-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை கும்பாபிஷேக விழாவுக்கான யாகசாலை பூஜைகள், 16-ந் தேதி பரிவார மூர்த்திகள் கும்பாபிஷேகம், தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நடக்கிறது. 17-ந் தேதி காலை 7.40 மணிக்கு மேல் 8.10 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்கிறது. 18-ந் தேதி முதல் அக்டோபர் 2-ந் தேதி வரை மண்டல பூஜைகள் நடைபெறும்” என அறிவிக்கப்பட்டது. இந்த விழாவை எவ்வித சட்டம்-ஒழுங்கு பிரச்சினையுமின்றி பாதுகாப்பான முறையில் நடத்தி முடித்திட ஒவ்வொரு துறை அலுவலர்களும் செய்ய வேண்டிய பணிகள் குறித்து கலெக்டர் விளக்கி கூறினார். லட்சக்கணக்கான பக்தர்கள் கும்பாபிஷேகத்தை காண லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால் அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குவதை போலீசார் உறுதி செய்ய வேண்டும். தேவையான இடங்களில் கண்காணிப்பு கேமரா, கட்டுப்பாட்டு அறை அமைத்தல், கூட்ட நெரிசல் ஏற்படாதவாறு தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்தல் வேண்டும். வாகன நெரிசல் ஏற்படாதவாறு போக்குவரத்தை உறுதி செய்ய வேண்டும். கோவில் பகுதி மிகவும் நெருக்கமாக போதிய இடவசதியின்றி உள்ளதால் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம் உள்ளிட்டவை வந்து செல்ல முன் ஏற்பாடுகள் செய்ய வேண்டும். எல்.இ.டி. திரைகள் கும்பாபிஷேகத்தினை கண்டு தரிக்கும் வகையில் தேவையான இடங்களில் எல்.இ.டி. திரைகள் அமைக்க வேண்டும். யாகசாலை பூஜைகளின்போது தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திட வேண்டும். இதே போன்று மாநகராட்சி, மருத்துவத்துறை, இந்து சமய அறநிலையத்துறை, மின்சாரத்துறை, தீயணைப்புத்துறை, நெடுஞ்சாலைத்துறை, உணவுப்பாதுகாப்புத்துறை, வருவாய்த்துறை என அனைத்து துறை சார்பில் தகுந்த ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/devotional/meenakshi-amman-temple-kumbabishekam-yaga-pujas-begin-on-6th-september




