சென்னை, இனியாவது ஒவ்வொரு மேடையிலும் சினிமா வசனங்கள் பேசி தனது கட்சிக்காரர்களை குஷிப்படுத்துவதை விட்டுவிட்டு, அவர்களுக்கு ஒழுக்கத்தையும் கண்ணியத்தையும் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் கற்றுத் தர வேண்டும் என நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார். நம்பிக்கை துரோகம் இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;- தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த, தவெக நிர்வாகியின் தம்பியை தட்டிக் கேட்டவர்களை, காவலர் முன்னிலையிலேயே சம்பந்தப்பட்ட நிர்வாகியின் குடும்பம் அரிவாளுடன் மிரட்டியதாக வெளியாகியுள்ள காணொளி கடும் அதிர்ச்சியளிக்கிறது. ஆட்சியில் இருக்கும் ஆணவத்தில், இதுநாள் வரை தவெக நிர்வாகிகள்தான் பெண்களுக்கு எதிரான வன்முறையில் ஈடுபட்டு வருகிறார்கள் என்று பார்த்தால், தற்போது அவர்களின் குடும்பத்தினர், சுற்றத்தினர் வரை இந்த வன்முறை குணம் நீள்வது ஆபத்தானது. தேர்தலின் போது, பெண் வாக்காளர்களை பிரதானமாக குறிவைத்து காய் நகர்த்திய தவெக, வெற்றி பெற்ற பிறகு அதே பெண்களின் பாதுகாப்பை தனது கட்சிக்காரர்களிடம் அடகு வைத்துவிட்டார். பெரும் நம்பிக்கை துரோகம் இழைத்து விட்டார். தவெகவினரால் பெண்களுக்கும் பாதுகாப்பில்லை தவெக ஆட்சிக்கு வந்ததில் இருந்து பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக இதுவரை 200 - க்கும் அதிகமான பாலியல் குற்றங்கள் நடந்துள்ளன, அவற்றில் 30-க்கும் அதிகமான குற்றங்களில் தவெகவினர் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். மொத்தத்தில் அதிகார போதை தலைக்கேறிய தவெகவினரால் தமிழகப் பெண்களுக்கும் பாதுகாப்பில்லை, சட்டம் ஒழுங்கை கண்காணிக்கும் காவலர்களுக்கும் மரியாதையில்லை. எனவே, இனியாவது ஒவ்வொரு மேடையிலும் சினிமா வசனங்கள் பேசி தனது கட்சிக்காரர்களை குஷிப்படுத்துவதை விட்டுவிட்டு, அவர்களுக்கு ஒழுக்கத்தையும் கண்ணியத்தையும் முதல்வர் திரு. ஜோசப் விஜய் அவர்கள் கற்றுத் தர வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/tvk-members-are-targeting-women-in-tamil-nadu-nainar-nagendran




