இயக்குநர் ராம் இயக்கத்தில் நடிகர்கள் நிவின் பாலி, சூரி, அஞ்சலி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'ஏழு கடல் ஏழு மலை'. சில ஆண்டுகளுக்கு முன்னரே இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், பல திரைப்பட விழாக்களிலும் இப்படம் திரையிடப்பட்டது. சூரி - ஏழு கடல் ஏழு மலை தற்போது இத்திரைப்படம் திரையரங்க வெளியீட்டிற்குத் தயாராகி வருகிறது. அக்டோபர் மாதம் 1-ஆம் தேதி இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. திரைப்படத்தின் வெளியீட்டைத் தொடர்ந்து புரமோஷனில் ஈடுபட்டு வரும் இயக்குநர் ராம், அதன் ஒரு பகுதியாகக் கோவையில் உள்ள பிராட்வே திரையரங்கிற்கு கடந்த 7-ஆம் தேதி வந்திருந்தார். அங்கு இயக்குநர் ராமுடன் நாம் உரையாடினோம். அவர், "இந்தத் திரைப்படம் குழந்தைக்குச் சொல்லப்படும் கதை என்பதால் அந்த அழகோடும், அந்த சுவாரஸ்யத்தோடும் சொல்லப்பட்டிருக்கும். அதற்கான நிஜ எமோஷன்கள் படத்தில் இருக்கும். 'பேரன்பு' படத்தின் பிரீமியர் ஷோவில் படத்தைப் பார்த்துட்டு நிவின் பாலி சார் 'நாம் ஒரு படம் சேர்ந்து பண்ணனும்' என்றார். நிவின் பாலி - ஏழு கடல் ஏழு மலை இந்தக் கதையில் ஓர் இம்மார்ட்டல் கதாபாத்திரம் எழுதும்போது அவர் முகம்தான் எனக்குத் தோன்றியது. சில நேரங்களில் அவருடைய முகத்தில் தாடி வளர்ந்தால், இயேசுவின் முகம் போலவே எனக்குத் தெரியும். அதனால்தான் அந்தக் கதாபாத்திரத்திற்கு அவர் முகம் என் நினைவுக்கு வந்தது. அவருடைய நடிப்பும் எனக்கு மிகவும் பிடிக்கும். அவருக்கு காமெடி வரும், ரொமான்ஸ் வரும், ஆக்ஷன் வரும். அந்த மூன்றுமே இந்தக் கதையில் இருக்கிறது. சூரி அண்ணனைப் பிடிக்காதவர்கள் இருக்கவே முடியாது என நினைக்கிறேன். அவரை எனக்கு பல வருடங்களாகத் தெரியும். அவரை நான் 'வெண்ணிலா கபடிக் குழு' படத்திலிருந்து பார்த்துக்கொண்டிருக்கிறேன். 'பேரன்பு' படத்தை அவர் பாராட்டிய விதமும் என்னைக் கவர்ந்தது. எனக்கும் அவருக்கும் எப்போதும் நல்ல புரிதல் இருக்கும். இந்தக் கதையே ஓர் இம்மார்ட்டல் மேனுக்கு எதிராக ஒரு மார்ட்டல் மேன் இருப்பதுதான். இயக்குநர் ராம் அதற்கு யார் பொருத்தமாக இருப்பார் எனப் பார்த்தால் அவர் இருந்தார். ஹீரோவை விடச் சிறந்த கதாபாத்திரம். இந்தக் கதையில் ஒரு காதல் இருக்கிறது. பீரியாடிக் ஆகவும், மாடர்னாகவும் பண்ண வேண்டும். அதை இந்த பட்ஜெட்டிற்குள் பண்ண வேண்டும் என்பதும் இருந்தது. அனைத்திற்கும் பொருந்தி வந்தது அஞ்சலிதான். நடிகர்கள் இந்தப் படத்திற்கு எவ்வளவு முக்கியமோ, அதுபோல எலி, யானை, குரங்கு, பூனையும் இப்படத்தில் முக்கியமானதாக இருக்கும்" எனப் பகிர்ந்துகொண்டார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://cinema.vikatan.com/kollywood/director-ram-interview-yezhu-kadal-yezhu-malai-nivin-pauly-soori



