நடிகர் கமல் ஹாசனின் 237-வது திரைப்படத்தின் படப்பிடிப்பில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் கமல்ஹாசன். மணிரத்னம் இயக்கத்தில் 234-வது படமான ‘தக் லைப்’ கடந்த ஆண்டு ஜுனில் வெளியானது. கமலின் 235-வது படத்தை இயக்குனர் பா.ரஞ்சித்தும், 236-வது படத்தை இயக்குனர் நெல்சனும் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியானது. ஆனால் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்புகள் தற்போதுவரை வெளியாகவில்லை. கமலின் 237-வது படத்தை பிரபல சண்டை பயிற்சியாளர்களான அன்பறிவ் (அன்புமணி, அறிவுமணி) சகோதரர்கள் இயக்க உள்ளனர். இவர்கள் 'மெட்ராஸ்' படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர்கள். இவர்கள் கன்னடம், மலையாளம், தெலுங்கு, இந்தி படங்களிலும் பணியாற்றி வருகிறார்கள். சமீபத்தில் இந்த படத்தின் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ராஜ் கமல் பிலிம்ஸ் வெளியிட்டது. இப்படம், டீ ஏஜிங் தொழில்நுட்பத்தில் பெரிய பொருள்செலவில் உருவாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாயின. இப்படம் ஏஐ தொழில்நுட்ப பின்னணியில் அறிவியல் புனைகதையாக உருவாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான முதல்கட்ட பணிகளுக்கான படக்குழுவை அழைத்துக்கொண்டு கமல் அமெரிக்கா சென்றார். மேலும், அவர் அங்கே ஏஐ தொடர்பான படிப்பையும் படித்தார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் துவங்காமல் இருக்கிறது. கடந்த ஆண்டே தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டாலும் தேர்தல் மற்றும் வேறு காரணங்களால் தள்ளிச்சென்றபடியே இருந்தது. இந்த நிலையில், இந்தத் தாமதத்திற்குக் காரணம், இப்படத்தில் ஏகப்பட்ட அனிமேஷன், ஏஐ காட்சிகள் இருப்பதால் அவற்றிற்கான கிராபிக்ஸ் பணிகளில் தாமதம் ஏற்படுவதால்தான் படப்பிடிப்பு இன்னும் தொடங்காமல் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. படத்தின் தரத்தில் சமரசம் செய்ய விரும்பாத படக்குழு, தற்போது 2 முன்னணி சர்வதேச சிஜிஐ ஸ்டூடியோக்களுடன் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. சிஜிஐ குழு இறுதி செய்யப்பட்டவுடன் படப்பிடிப்பு தொடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/cinema/cinemanews/kamals-237th-film-shooting-delayed-due-to-graphics-work




