ஈரான் போர் தொடங்கிக் கிட்டத்தட்ட 6 மாதங்கள் ஆகிவிட்டன. ராணுவத்தின் மூலம் ஈரானை அமெரிக்காவால் வழிக்குக் கொண்டுவர முடியவில்லை. இதனால், பொருளாதாரத் தடை அஸ்திரத்தைக் கையில் எடுத்துள்ளது அமெரிக்கா. கடந்த புதன்கிழமை (ஆகஸ்ட் 19), அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ‘பொருளாதார D-Day’-ஐ அறிவித்தார். இதன்படி, ஈரானுடன் வர்த்தகம் மேற்கொள்ளும் நாடுகளுக்கு அமெரிக்காவின் தடைகள் பாயும். இந்தத் தடைகள் குறித்து நேற்று அமெரிக்காவின் நிதித்துறைச் செயலாளர் ஸ்காட் பெசென்ட் விளக்கியுள்ளார். ட்ரம்பின் அரசாங்கம் இந்தத் தடைக்கு வைத்துள்ள பெயர் – ‘ஆபரேஷன் எகனாமிக் அவுட்காஸ்ட்’ (Operation Economic Outcast). இந்தத் தடைகள் குறித்து ஸ்காட் பெசென்ட்டின் வார்த்தைகளில் காணலாம். ஸ்காட் பெசன்ட்Economic D-Day: பில்லியன் டாலர் ஆயுதங்களால் முடியாததை தடைகளால் செய்ய முடியுமா? ட்ரம்பின் திட்டம்! ஏன் இந்த நடவடிக்கை? ஈரானிய இஸ்லாமியக் குடியரசைத் தாங்கிப் பிடிக்கும் எஞ்சியிருக்கும் அனைத்துப் பொருளாதார வாழ்வாதாரங்களையும் முற்றிலும் துண்டிப்பதற்கான முன்னெப்போதும் இல்லாத ஒரு நடவடிக்கை இது. அதிபர் ட்ரம்ப் மற்றும் அமெரிக்க ராணுவத்தின் பிரமாண்ட ஆற்றல் மூலம் ஈரானின் ராணுவத் திறன்களும் அணுசக்தித் திட்டங்களும் முடக்கப்பட்டுவிட்டன. எதிரி நாட்டிற்கு எதிராக இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய நிதித் தாக்குதலைத் தொடுத்து, அமெரிக்கா தனது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. ஈரானுக்கு இரண்டே வழிகள்தாம்! ஈரான் இப்போது மிகத் தெளிவான ஒரு முடிவை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அவர்களுக்கு முன்னால் இரண்டே வழிகள்தான் உள்ளன. ஒன்று, முற்றிலும் உலகளாவிய தனிமைப்படுத்தல் மற்றும் பிழைப்புக்கான பொருளாதாரம் அல்லது உலகப் பொருளாதாரத்துடன் மீண்டும் இணைவதற்கான வாய்ப்புடன் இயல்பு நிலைக்குத் திரும்பும் வழி. ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்Gold: மீண்டும் ரூ.1.20 லட்சத்தைத் தாண்டிய தங்கம் விலை; என்னதான் காரணம் இதற்கு? இன்னும் உயருமா? என்னென்ன நடவடிக்கை பாயும்? அமெரிக்கா, ஈரானுக்கு எதிராக ‘ஜீரோ-லீக்கேஜ்’ அணுகுமுறையை அமல்படுத்துகிறோம். > ஈரான் பிற நாடுகளில் பயன்படுத்தும் ஐந்து முக்கிய வாழ்வாதாரங்களான – டிஜிட்டல் சொத்துக்கள், தொழில்நுட்பம், தங்கம், விமானப் போக்குவரத்து மற்றும் கப்பல் போக்குவரத்து ஆகியவற்றைக் குறிவைக்கிறோம். ஈரான் ஆட்சியுடன் தொடர்ந்து தொழில் செய்யும் முட்டாள்தனத்தில் ஈடுபடும் எவருக்கும் இரண்டாம் நிலைத் தடைகளின் ஆபத்தை இந்த நடவடிக்கைகள் அதிகரிக்கும். > ஈரான் சார்பில் பணமோசடிக்குத் (money laundering) துணைபுரியும் எந்தவொரு அமைப்பும் அமெரிக்க டாலர் அமைப்பிலிருந்து அகற்றப்படும். > ஈரான் ஆட்சியுடன் தொடர்பில் இருக்கும் நாடுகள் எங்கள் எச்சரிக்கையை உடனே கவனிப்பது நல்லது. அமெரிக்காவுடன் நிற்பவர்கள் எங்கள் கூட்டணியின் நன்மைகளை அறுவடை செய்வார்கள். ஈரானிய ஆட்சியுடன் கைகோர்ப்பவர்கள், சாய்ந்துகொண்டிருக்கும் ஒரு ஆட்சியுடன் சேர்ந்து தனிமைப்படுத்தப்பட வேண்டியிருக்கும். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.vikatan.com/government-and-politics/us-unveils-operation-economic-outcast-sanctions-on-iran



