திருவள்ளூர், திருவள்ளூர் மாவட்டம், திருவேற்காட்டில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் நண்பரை கிணற்றில் தள்ளி கொலை செய்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். கிணற்றில் தொழிலாளி பிணம் திருவள்ளூர் மாவட்டம், திருவேற்காடு அடுத்த மேல் அயனம்பாக்கம், சந்திரமவுலீஸ்வரர் கோவில் தெருவில் உள்ள கிணற்றில் அழுகிய நிலையில் ஆண் பிணம் கிடப்பதாக அப்பகுதி மக்கள் நேற்று முன்தினம் திருவேற்காடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், கிணற்றில் இருந்து பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், கிணற்றில் பிணமாக கிடந்தவர் திருவேற்காடு, சின்ன கோலடி, ரெட்டி தெருவைச் சேர்ந்த பாஸ்கரன் (வயது 44) என்பதும், அவர் சென்ட்ரிங் தொழில் செய்து வந்ததும் தெரியவந்தது. அவரது மனைவி சந்தியா(34). இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். சந்தேகம் முதற்கட்ட விசாரணையில் பாஸ்கரன் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்திருக்கலாம் என போலீசார் கருதினர். ஆனால், தனது கணவருக்கு நன்றாக நீச்சல் தெரியும் என்றும், அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம் இருப்பதாகவும் பாஸ்கரனின் மனைவி சந்தியா போலீசாரிடம் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். விசாரணையில், சம்பவத்தன்று பாஸ்கரனும் அவரது நண்பரான கூலித் தொழிலாளி சரவணன்(37) என்பவரும் மேல் அயனம்பாக்கம் பகுதியில் உள்ள கிணற்றின் அருகே ஒன்றாக அமர்ந்து மது அருந்தியதும், பின்னர் இருவரும் கிணற்றில் குளித்ததும் தெரியவந்தது. கிணற்றில் தள்ளிவிட்டு கொலை இதுதொடர்பாக போலீசார் அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் பாஸ்கரனும், சரவணனும் ஒன்றாக செல்வதும், பின்னர் சரவணன் மட்டும் தனியாக திரும்பி வருவதும் பதிவாகியிருந்தது. இதையடுத்து சரவணனை பிடித்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது. இருவரும் ஒன்றாக மது அருந்தியபோது அவர்களுக்கு இடையே போதையில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சரவணன், பாஸ்கரனை கிணற்றில் தள்ளி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். இதையடுத்து போலீசார் சரவணனை கொலை வழக்கில் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/worker-arrested-for-pushing-friend-into-well-over-drunken-argument




