நெல்லை, நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் அருகே 4 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் பாதிரியார் ஆபிரகாமுக்கு தூக்கு தண்டனை விதித்து நெல்லை போக்சோ சிறப்பு கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது. 4 சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை தேவர்குளம் அருகே மேல இலந்தைகுளம் பகுதியில் கிறிஸ்தவ சபை செயல்பட்டு வருகிறது. இங்கு பாதிரியாராக பணியாற்றி வந்த ஆபிரகாம் (47), கடந்த 2022-ம் ஆண்டு திருச்சபைக்கு வந்த 4 சிறுமிகளை சட்டவிரோதமாக அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. மேலும், சம்பவம் குறித்து வெளியே யாரிடமும் தெரிவிக்கக்கூடாது என்றும், அவ்வாறு தெரிவித்தால் கொலை செய்து விடுவதாகவும் சிறுமிகளை மிரட்டியதாக கூறப்படுகிறது. பாதிரியார் கைது இதுகுறித்த புகாரின் பேரில் தேவர்குளம் போலீசார் விசாரணை நடத்தி, பாதிரியார் ஆபிரகாமை கைது செய்தனர். அவர் மீது போக்சோ சட்டத்தின் கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு நெல்லை போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் உஷா ஆஜராகி வாதாடினார். தூக்கு தண்டனை வழக்கில் போலீசார் தாக்கல் செய்த ஆதாரங்கள் மற்றும் அரசு தரப்பு வாதங்களின் அடிப்படையில், ஆபிரகாம் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதாக கோர்ட்டு தெரிவித்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார், 4 சிறுமிகளுக்கு எதிராக பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட பாதிரியார் ஆபிரகாமுக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். சிறுமிகளுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு மேலும், பாதிக்கப்பட்ட 4 சிறுமிகளுக்கும் தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார். இந்த ஆண்டில் நெல்லை போக்சோ சிறப்பு கோர்ட்டில் போக்சோ வழக்கில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதிக்கப்படுவது இது 4-வது முறை என தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/courts-stern-order-death-sentence-for-priest-who-sexually-assaulted-four-minor-girls




