ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் கடந்த மார்ச் மாதம் 10 - வகுப்பு தேர்வை எழுதி முடித்துவிட்டு விடுமுறையில் வீட்டில் இருந்துள்ளார். சிறுமியின் பெற்றோர் வேலைக்குச் சென்ற நிலையில், பகல் பொழுதில் சிறுமி தனியாக இருந்துள்ளார். இதை நோட்டம் விட்ட 39 வயதான பெயின்ட்டர் வெள்ளியங்கிரி என்பவர், சிறுமியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்திருக்கிறார். சிறுமியின் வாயில் செல்லோ டேப்பை ஒட்டி, கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும், இது குறித்து வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவவேன் என மிரட்டியிருக்கிறான். அச்சமடைந்த சிறுமி இது கொடுமை குறித்து யாரிடமும் சொல்ல முடியாமல் தவித்து வந்திருக்கிறார். கைதான வெள்ளியங்கிரி இந்த நிலையில், அந்தச் சிறுமியின் உடல்நிலையில் திடீரென ஏற்பட்டு வரும் மாற்றத்தைக் கண்டு பதறிய தாய் விசாரித்திருக்கிறார். தனக்கு நேர்ந்த கொடுமையை சிறுமி அழுதுகொண்டே கூறியுள்ளார். உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்துள்ளனர். சிறுமி 5 மாத கர்ப்பமாக இருப்பதை மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர். பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் பெயின்ட்டர் வெள்ளியங்கிரி மீது போக்ஸோ பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். த.வெ.க மாவட்டச் செயலாளரைச் சுழற்றியடிக்கும் பாலியல் புகார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.vikatan.com/crime/erode-girl-sexually-assaulted-after-having-her-mouth-taped-shut




