கோவை விமான நிலையத்தில் வருவாய் துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “சட்டமன்றத்தில் ஒவ்வொருவரும் கற்றுக் கொள்ள வேண்டியது ஒன்றே ஒன்றுதான். பேரவை தலைவர், தமிழக முதல்வர் விரும்புவதைப் போல சபையில் எதிர்காலத்தில் தமிழகத்திற்கு என்ன செய்யலாம் என்று கருத்துக்களை பரிமாறிக் கொண்டால் மகிழ்ச்சியாக இருக்கும். வார்த்தை ஜாலங்களால் தேவையற்ற விவாதங்கள் வருகிறது. அந்த விவாதங்களை தவிர்ப்பது நல்லது. சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் கார் தேவை. ஒரு ஓட்டுநர், உதவியாளர் தேவை. ஒன்றிய குழுவில் இருக்கும் ஒன்றிய குழு தலைவர்களுக்கு, நகராட்சி தலைவர்களுக்கு தனியாக வாகனம் தி.மு.க ஆட்சியில் கொடுக்கப்பட்டுள்ளது. இப்போது நாங்கள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கொடுத்துள்ளோம். தி.மு.க-வினர் தங்களுக்கு கார் வேண்டியதில்லை என்று சொல்ல காரணம், அவர்கள் ஆட்சியில் இதை நிறைவேற்ற முடியவில்லை என்ற எண்ணம்தான். ஒரு கார் உங்களிடம் இருக்கிறது. குழந்தைகள் போய் வர இன்னொரு கார் இருந்தால் மகிழ்ச்சியாக இருக்கும் அல்லவா? நிதி நெருக்கடி என்பது ஒன்று. அதே நேரத்தில் தன்னலம் என்று வழி இல்லாமல் பணி செய்ய இது ஏதுவாக இருக்கும் என்ற மனித நேயத்தில் முதல்வர் வழங்கி இருக்கிறார். செங்கோட்டையன் பல்வேறு நிதி சுமைகள் இருந்தாலும் எதை செய்யலாம் என முடிவு செய்கின்றோம். இன்று இருக்கின்ற நிதி நெருக்கடியின் காரணமாக வாங்கவில்லை என்று சொல்வது, அவர்கள் காலத்தில் செய்ய முடியவில்லை இவர்கள் செய்து விட்டார்களே என்ற வேதனைதான். மேகதாது அணை விவகாரத்தை பொறுத்தவரை முதல்வர் தெளிவாக இருக்கிறார். ஒரு செங்கலை கூட அங்கே வைக்க முடியாது என்பது கொள்கை முடிவு. அதில் தெளிவாக இருக்கிறார். மேகதாது விவகாரத்தில் தெளிவான முடிவுகளை இந்த அரசு மேற்கொண்டு இருக்கிறது. என்றைக்கும் நம் நிலைப்பாட்டை மீறி அணைக்கட்ட முடியாது. குறிப்பிட்ட பகுதியில் ஒரு வட்டாட்சியர் இடதுசாரி பொறுப்பாளர்கள் குறித்து பட்டியல் எடுக்க உத்தரவு வழங்கினார். தகவல் தெரிந்தவுடன் இரவோடு இரவாக அவர் மாற்றப்பட்டார். அவர் கொடுத்த கடிதம் உடனே திரும்பப் பெறப்பட்டது. அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சட்ட விதிகளுக்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். முதல்வர் விஜய் மேஜையில் உள்ள 3 கோப்புகள் தொடர்பாக எந்த தேதியில், எப்போது அறிவிப்பார் என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். சட்ட விதியின் அடிப்படையில் கோப்புகளை பார்த்து, என்ன நடைபெற்று இருக்கிறது என உணர்ந்த பிறகு சட்டதுறையோடு கலந்து பேசி நடவடிக்கை எடுக்கப்படும். கோப்புகளில் என்னென்ன குறைபாடுகள் இருக்கிறது என நிதி அமைச்சர், முதல்வரிடம் விளக்கத்தை கொடுத்து இருக்கிறார். அதைத்தான் அவர் சொல்லியிருக்கிறார்” என்றார். ரயில் மோதி யானைகள் உயிரிழப்பதை தடுக்கும் ஏஐ தொழில்நுட்பம் – பின்பற்ற தயாரான பிற மாநிலங்கள்! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.vikatan.com/government-and-politics/sengottaiyan-explains-the-reason-why-dmk-mlas-refused-to-buy-cars



