ஹராரே, 20 ஓவர் கிரிக்கெட் ஆப்பிரிக்க நாடான ஜிம்பாப்வேக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் ஹராரேயில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத் தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இந்தியா- ஜிம்பாப்வே இடையிலான 2-வது 20 ஓவர் போட்டி அதே ஹராரேயில் இன்று (சனிக்கிழமை) நடக்கிறது. தொடக்க ஆட்டத்தில் ஜிம்பாப்வேயை 125 ரன்னில் சுருட்டிய இந்தியா அந்த இலக்கை 13.2 ஓவர்களிலேயே எட்டிப்பிடித்தது. வேகப்பந்து வீச்சாளர்கள் மயங்க் யாதவ், பிரின்ஸ் யாதவ் ஆகியோரது அபார பந்து வீச்சும் (தலா 2 விக்கெட்), வைபவ் சூர்யவன்ஷி 18 பந்துகளில் 50 ரன்கள் விளாசியதும் வெற்றியை சுலபமாக்கின. முதல் வெற்றி புதிய கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் தலைமைக்கு கிடைத்த முதல் வெற்றி இதுவாகும். அதே உத்வேகத்துடன் -வது ஆட்டத்திலும் ஆதிக்கம் செலுத்த முனைப்பு காட்டுகிறது. 'இளம் புயல்' சூர்யவன்ஷி மீண்டும் ரன்மழை பொழிவாரா என ரசிகர்கள் ஆவல் கொண்டுள்ளனர். சிகந்தர் ராசா தலைமையிலான ஜிம்பாப்வே, சில மாதங்களுக்கு முன்பு 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா, இலங்கை அணிகளுக்கு அதிர்ச்சி அளித்திருந்தது. ஆனால் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் அதுவும் உள்ளூர் சூழலில் எதிர்பார்த்த அளவுக்கு சோபிக்கவில்லை. ஆடுகளத்தில் காணப்பட்ட ஈரப்பதம் நீண்ட நேரம் நீடித்ததாகவும், அது தாக்கத்தை ஏற்படுத்திவிட்டதாகவும் சிகந்தர் ராசா கூறியிருந்தார். இதன்படி பார்த்தால் இன்றைய ஆட்டத்திலும் 'டாஸ்' முக்கிய பங்கு வகிக்கும். அதாவது 'டாஸ்' ஜெயிக்கும் அணி முதலில் பந்து வீச்சுக்கே முன்னுரிமை அளிக்கும். தொடரை இழக்காமல் இருக்க ஜிம்பாப்வே முடிந்த வரை கடுமையாக போராடுவார்கள் என்பதால் ஆட்டம் விறுவி றுப்பு நிறைந்ததாக அமையும் என நம்பலாம். மாலை 4.30 மணிக்கு. போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:- இந்தியா: அபிஷேக் ஷர்மா, வைபவ் சூர்யவன்ஷி, இஷான் கிஷன், ஸ்ரே யாஸ் அய்யர் (கேப்டன்), திலக் வர்மா, ரிங்கு சிங், ஷிவம் துபே, ரவி பிஷ்னோய், பிரின்ஸ் யாதவ், மயங்க் யாதவ், அசோக் ஷர்மா. ஜிம்பாப்வே: பிரையன் பென்னட், பென் கர்ரன், டியான் மையர்ஸ், சிகந் தர் ராசா (கேப்டன்). ரையான் பர்ல், வெஸ்லி மாதேவிர், மருமானி, பிராட் இவான்ஸ், நியூமன் நியாமுரி அல்லது வெலிங்டன மசகட்சா, ரிச் சர்ட் நரவா, முஜரபானி. இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை யுனைட்8 ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/sports/cricket/t20-cricket-will-india-win-the-series-zimbabwe-clash-today




