திருப்பதி, திருப்பதி திருமலையில் உள்ள நாராயணகிரி மலை மீது ஏழுமலையானின் திருப்பாதங்கள் உள்ளன. வைகுண்டத்தில் இருந்து பூமிக்கு இறங்கி வந்த மகாவிஷ்ணு (சீனிவாசன்), திருமலையின் மிக உயர்ந்த நாராயணகிரி மலையின் மீதுதான் தனது முதல் அடியை எடுத்து வைத்தார் என்று நம்பப்படுகிறது. இதனை நினைவுகூரும் வகையில் ஆடி மாதம் துவாதசி நாளன்று, நாராயணகிரியில் உள்ள திருப்பாதங்களுக்கு சத்திரஸ்தாபன உற்சவம் நடத்தப்படுகிறது. அவ்வகையில் இன்று நாராயணகிரியில் சத்திரஸ்தாபன உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. இதற்காக கோவிலில் இருந்து அர்ச்சகர் குழுவினர், மங்கள வாத்தியங்கள் முழங்க, பூஜைப் பொருட்கள், மலர்கள், நைவேத்ய பிரசாதம் மற்றும் திருக்குடையுடன் கோவில் மாடவீதிகள் வழியாக, மேதரமிட்டாவை அடைந்தனர். நாராயணகிரி ஏழுமலையான் திருப்பாதத்தில் சந்திரஸ்தாபனோஸ்வம் திருக்குடை பிரதிஷ்டை அங்கிருந்து நாராயணகிரிக்கு சென்று, முதலில் ஏழுமலையானின் திருப்பாதங்களுக்கு திருமஞ்சனம் நடத்தி, அலங்காரம் செய்து பூஜைகள் செய்து நைவேத்தியம் சமர்ப்பித்தனர். பூஜை நிறைவடைந்ததும், பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. சிறப்பாக அலங்கரிக்கப்பட்ட திருக்குடை, பகவானின் திருப்பாதங்கள் அருகே பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த உற்சவத்துடன் தொடர்புடைய மற்றொரு நம்பிக்கையும் உள்ளது. இந்தக் காலகட்டத்தில் பலத்த காற்று வீசும் நிலையில், உயரமான நாராயணகிரி சிகரத்தில் காற்றின் வேகம் மேலும் அதிகமாக இருக்கும். அந்தக் காற்றின் தாக்கம் குறையவும், வாயு பகவானின் அருள் கிடைக்கவும் பிரார்த்தனை செய்து இங்கு குடை பிரதிஷ்டை செய்யப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் கோவில் அதிகாரிகள், அர்ச்சகர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/devotional/chatra-sthapana-utsavam-held-at-srivari-padalu-on-narayanagiri-tirumala




