72 வயதான ஜாக்கிசான் நல்ல உடல் நலத்துடன் ஹாங்காங்கில் இருப்பதாகவும், படப்பிடிப்பில் பிசியாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது. இதனால் ரசிகர்களும் நிம்மதி பெருமூச்சு விட்டு வருகின்றனர். ரசிகர்களை கவர்ந்த ஜாக்கி சான் உலக சினிமாவில் அதிரடி ஆக்ஷன் காட்சிகளுக்கு தனித்துவமான அடையாளமாக விளங்கும் நடிகர் ஜாக்கி சான், தனது சாகசமான சண்டைக் காட்சிகள் மற்றும் நகைச்சுவை கலந்த நடிப்பால் பல தலைமுறை ரசிகர்களை கவர்ந்தவர். புரூஸ் லீ-க்கு பிறகு அதிரடி ஆக்ஷன் காட்சிகளால் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தவர், ஜாக்கி சான். உலகம் முழுவதும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இவரது படங்கள் உலகம் முழுவதும் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டு வருகிறது. காட்டுத்தீயாக பரவும் தகவல் இதற்கிடையில் ஜாக்கி சான் உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் நேற்று காட்டுத்தீயாக சமூக வலைத்தளங்களில் வெளியானது. இதனால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து போனார்கள். ஜாக்கிசான் குறித்து கவலையுடன் பல கேள்விகளை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்தனர். படப்பிடிப்பில் ஜாக்கி சான் இந்த சூழலில் 72 வயதான ஜாக்கி சான் நல்ல உடல் நலத்துடன் ஹாங்காங்கில் இருப்பதாகவும், ‘ஆர்மர் ஆப் காட் 4: அல்டிமேட்டம்’ உள்ளிட்ட படங்களில் அவர் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வரும் ‘ரஸ் ஹர்ஸ் 4’ படத்திலும் அவர் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதையடுத்து வதந்திகள் அத்தனையும் தவிடுபொடியாகி இருக்கிறது. இதனால் ரசிகர்களும் நிம்மதி பெருமூச்சு விட்டு வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/cinema/cinemanews/what-happened-to-jackie-chan-news-spreads-like-wildfire



