சென்னை, சென்னை அணியின் பயிற்சியளராக இருந்த பிளெமிங் விலகிய நிலையில், சென்னை அணி புதிய பயிற்சியாளரைத் தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அடுத்த தலைமைப் பயிற்சியாளராக ஹேமங் பதானி நியமிக்கப்படுவதற்கான வாய்ப்பு தற்போது அதிகமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நீண்டகால பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளெமிங் விலகியதைத் தொடர்ந்து, சென்னை புதிய பயிற்சியாளரைத் தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது. முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரான ஹேமங் பதானி, ஏற்கனவே ஐபிஎல் அணியான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். மேலும், தமிழ்நாடு பிரீமியர் லீக் அணியான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியுடனும் அவருக்கு பயிற்சியாளர் அனுபவம் உள்ளது. முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி, இந்திய பயிற்சியாளர் தலைமையிலான அமைப்பை ஆதரிப்பதாகவும், ஹேமங் பதானியின் பெயருக்கு ஆதரவு இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/sports/cricket/is-hemang-badani-the-next-coach-of-the-chennai-team




