சென்னை, நேபாளம் வெள்ளத்தில் சிக்கிய 21 தமிழர்கள் விமானம் மூலம் இன்று (வெள்ளி கிழமை) இரவு சென்னை திரும்புகின்றனர். தமிழக அரசு நேபாளத்தில் நேற்று முன்தினம் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 500-ஐ நெருங்கி உள்ளது. இதில் தமிழ்நாட்டில் இருந்து சென்ற மொத்தம் 85 பேர் மாயமாகியுள்ளனர். அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்களது உறவினர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்திருந்தனர். அவர்களை மீட்கும் பணியில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனிடையே, மீட்புப்பணிகளை ஒருங்கிணைப்பதற்காக பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், வேளாண்மைத் துறை அமைச்சர் வினோத் மற்றும் அயலகத் தமிழர் நலத்துறை அமைச்சர் தென்னரசு ஆகியோர் நேற்று டெல்லி சென்றனர். தமிழக அமைச்சர்கள் இந்த நிலையில், நேபாள பேரிடரில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் நடவடிக்கைகளுக்காக, டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் அமைக்கப்பட்டுள்ள உதவி மையக் கட்டுப்பாட்டு அறையை பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், வேளாண்மைத் துறை அமைச்சர் வினோத் மற்றும் அயலகத் தமிழர் நலத்துறை அமைச்சர் தென்னரசு ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். 100-க்கும் மேற்பட்டோர் உதவி மையத்தின் செயல்பாடுகள், பெறப்படும் அழைப்புகள், தகவல் சேகரிப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்கான ஒருங்கிணைப்பு குறித்து அதிகாரிகளுடன் கேட்டறிந்தனர். தூதரக அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக அமைச்சர் ராஜ்மோகன் கூறுகையில், தமிழகத்தில் இருந்து 50-க்கும் மேற்பட்டோர் தான் நேபாளம் சென்றிருப்பார்கள் என்று நினைத்தோம். தற்போது ஒன்றுக்கும் மேற்பட்ட குழுவைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் சென்றிருப்பது தெரியவந்துள்ளது. 26 பேர் பாதுகாப்பாக இருப்பதாகவும், அவர்களை தொடர்பு கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சிலரை கண்டறிய முடியவில்லை. மத்திய அரசு, நேபாள அரசுடன் பேசி அவர்களுக்கான உதவிகளை செய்வோம். விரைவில் அவர்களை மீட்டு வருவோம். பாதிக்கப்பட்டவர்களுக்கு துணை நிற்போம்’ என்றார். இன்று இரவு இந்நிலையில் நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கிய, கும்பகோணத்தில் இருந்து கைலாஷ் யாத்திரைக்குச் சென்ற 57 பேரில் இதுவரை பாதுகாப்பாக மீட்கப்பட்ட 21 பேர் இன்று இரவு சென்னை வந்து நாளை அவர்களது சொந்த ஊருக்கு செல்கின்றனர். காத்மண்டுவில் இருந்து மதியம் 2.15 மணிக்கு புறப்படும் விமானம் 3.45க்கு டெல்லி வரவுள்ளது. அங்கிருந்து 8 மணிக்கு சென்னைக்கு அழைத்து வரப்படவுள்ளனர். முன்னதாக நேபாளத்துக்கு சென்று மீட்புப் பணிகளை ஒருங்கிணைக்க, அமைச்சர்களுக்கு உத்தரவிட்டிந்த முதல்-அமைச்சர் விஜய், மீட்கப்பட்டுள்ள 21 தமிழர்களை தாயகம் அழைத்து வர ஏற்பாடு செய்யவும், தொடர்பு கொள்ள இயலாதவர்களின் நிலையைக் கண்டறிந்து மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தவும் அறிவுறுத்தியிருந்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/tamils-returning-to-chennai-from-nepal-tamil-nadu-government-makes-arrangements




