புதுடெல்லி, நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக, மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிர தான் பதவி விலகக்கோரியும் மற்றும் கல்வி முறையில் முழுமையான சீர்தி ருத்தம் செய்ய வேண்டும் எனக் கோரியும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியி னர் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வருகின்றனர். உயர் கல்வித்துறை மத்திய கல்வி மந்திரியை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு வந்த நிலையில் மத்திய அரசு நேற்றிரவு திடீரென மத்திய உயர் கல்வித்துறை செயலாளரை மாற்றி அதிரடி உத்தரவு பிறப்பித்தது. அதன்படி, மத்திய உயர் கல்வித்துறை செயலாளராக பணியாற்றி வந்த மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி வினித் ஜோஷி பஞ்சாயத்துராஜ் அமைச்சகத்திற்கு இட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். டெல்லி ஐகோர்ட்டு இதைத்தொடர்ந்து மீன்வள மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சகத்தின் செயலாளராக பணியாற்றி வந்த நரேஷ் பால் கங்க்வார் மத்திய உயர்கல்வித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே, தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பான குற்றவியல் வழக்குகளை விசாரிக்க டெல்லி ஐகோர்ட்டு சிறப்பு நீதிமன்றத்தை அறி வித்து உத்தரவிட்டுள்ளது. அதன்படி, இந்த நீதிமன்றத்தின் சிறப்பு நீதிபதியாக அனு குரோவர் பலிகா என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/india/aftermath-of-delhi-protests-higher-education-secretary-transferred-abruptly




