திருநெல்வேலி, திருநெல்வேலி தாலுகா காவல் நிலைய சரக போலீசாரின் துரித நடவடிக்கையால் குற்றம் நடந்த 12 மணி நேரத்திற்குள் வழிப்பறியில் ஈடுபட்ட குற்றவாளியை கைது செய்து பறிக்கப்பட்ட தங்க மோதிரம் மீட்கப்பட்டது. தங்க மோதிரம் பறிப்பு திருநெல்வேலி மாவட்டம், தாலுகா காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் கடந்த 31.7.2026 அன்று மாலை, மதுபோதையில் இருந்த ஒருவரிடம் மர்ம நபர் ஒருவர், தனது பைக் கே.டி.சி. நகர் அருகே இருப்பதாகக் கூறி அழைத்துச் சென்றார். பின்னர் ஒரு தனியார் கல்லூரி அருகே சந்தோஷ்நகர்-2 பின்புறமுள்ள காட்டுப்பகுதியில் வைத்து அந்த நபரை தாக்கி, அவர் அணிந்திருந்த 3½ கிராம் எடையுள்ள தங்க மோதிரத்தை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றார். இதில் காயமடைந்த புகார்தாரர், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 12 மணி நேரத்திற்குள் குற்றவாளி கைது, மோதிரம் மீட்பு இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் தாலுகா காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து, போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்ராஜ், சப்-இன்ஸ்பெக்டர் தங்கப்பராஜா மற்றும் போலீசார் மேற்கொண்ட கண்காணிப்பு கேமரா பதிவுகள் ஆய்வு மற்றும் தீவிர விசாரணையின் மூலம், தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு காவல் நிலையத்தைச் சேர்ந்த வரலாற்றுப் பதிவேடு குற்றவாளி சின்னதுரை (வயது 34) என்பவரை, திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகே வைத்து, குற்றம் நடைபெற்ற 12 மணி நேரத்திற்குள் கைது செய்து, அவரிடமிருந்து பறிக்கப்பட்ட தங்க மோதிரத்தையும் மீட்டனர். மேலும் அந்த நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். எஸ்.பி. பாராட்டு இந்த சம்பவத்தில் குற்றம் நடைபெற்ற 12 மணி நேரத்திற்குள் குற்றவாளியை கைது செய்து, பறிக்கப்பட்ட நகையை மீட்டதுடன், வழக்கில் துரிதமாக நடவடிக்கை மேற்கொண்ட தாலுகா காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசாரை திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. விஷ்வேஷ் பா.சாஸ்திரி பாராட்டினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/gold-ring-snatched-in-nellai-police-arrest-culprit-within-12-hours




