நத்தம், டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடரில் இன்றைய முதல் லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கெதிராக டாஸ் வென்ற திருப்பூர் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. டி.என்.பி.எல் 10-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண் டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும். டாஸ் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. முதல் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த நிலையில் இன்றைய ஆட்டத்திற்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற திருப்பூர் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி, சேப்பாக் அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் முன்னாள் சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி தனது தொடக்க ஆட்டத்தில் 50 ரன்கள் வித்தியாசத்தில் நெல்லை ராயல் கிங்சிடம் தோல்வி அடைந்தது. திருப்பூர் தமிழன்ஸ் நடப்பு சாம்பியனான திருப்பூர் தமிழன்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் திண்டுக்கல்லிடம் 107 ரன்னில் சுருண்டு படுதோல்வி அடைந்தது. இரு அணிகளும் சரிவில் இருந்து மீண்டெழும் உத்வேகத்துடன், முதல் வெற்றிக்கு வரிந்து கட்டுவதால் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/sports/cricket/tnpl-cricket-tiruppur-wins-toss-and-elects-to-bowl-against-chepauk-super-gillies




