புதுடெல்லி, ரஷியாவின் முன்னாள் துணை பிரதமர் அர்காடி துவோர்கோவிச் சர்வதேச செஸ் சம்மேளன (பிடே) தலைவராக கடந்த 2018-ம் ஆண்டு முதல் இருந்து வந்தார். இந்த நிலையில் ரஷியா- உக்ரைன் போரில் தொடர்புடையவர்கள் மீது ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்துள்ளது. அந்த பட்டியலில் துவோர்கோவிச்சின் பெயரும் இடம் பெற்றுள்ளது. இதனால் 'பிடே' தலைவர் பதவியில் இருந்து ஒதுங்கியுள்ள அவர் ஐரோப்பிய ஒன்றியத்தின் முடிவு நியாயமற்றது. இதை எதிர்த்து அனைத்து வழிகளிலும் போராட போவதாக அறிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து 'பிடே'வின் இடைக்கால தலைவராக 5 முறை உலக சாம்பியனும், தமிழகத்தை சேர்ந்தவருமான விஸ்வநாதன் ஆனந்த் பொறுப் பேற்றுள்ளார். 'பிடே' தலைவர் பதவியை அலங்கரிக்கும் முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ள ஆனந்த் 2022-ம் ஆண்டு முதல் இதன் துணைத்தலைவராக இருப்பது குறிப்பிடத்தக்கது. 56 வயதான ஆனந்த் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், 'துவோர்கோவிச் தனது பணிகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்கும் முடிவை எடுத்ததை தொடர்ந்து 'பிடே' விதிமுறைகளின்டி இடைக்கால தலைவராக நான் பொறுப்பேற்றுள்ளேன். அவரது தலைமைப் பண்புக்கும், 'பிடே'வின் நலன்கள் மற்றும் ஸ்திரத்தன்மைக்கு அவர் அளித்த அர்ப்பணிப்புக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 'பிடே' கவுன்சிலுடன் இணைந்து பணியாற்றுவதிலும், உலகளாவிய செஸ் குடும்பத்துக்கு சேவை செய்வதிலும் கவனம் செலுத்துவேன்' என்று தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/sports/othersports/international-chess-federation-interim-president-viswanathan-anand-assumes-charge




