நடிகர் ஜிவி பிரகாஷ்குமார் நடிப்பில் உருவான ‘இடிமுழக்கம்’ திரைப்படத்தின் 2 பாடல்களை இயக்குநர் பகிர்ந்துள்ளார். தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, தர்மதுரை, கண்ணே கலைமானே என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கிய சீனு ராமசாமி, அடுத்ததாக இயக்கி உள்ள படம் ‘இடிமுழக்கம்’. ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக காயத்ரி சங்கர் நடித்துள்ளார். மேலும் சரண்யா பொன்வண்ணன், சுபிக்ஷா, செளந்தரராஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஸ்கைமேன் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் கலைமகன் முபாரக் தயாரித்துள்ளார். ‘இடிமுழக்கம்’ படம் 22-வது பூனே சர்வதேச திரைப்பட விழாவில் இந்திய சினிமா பிரிவில் திரையிடப்பட்டு வரவேற்பை பெற்றது. ‘இடிமுழக்கம்’ படம் மலையாளத்தில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளியான ‘லட்சியம்’ படத்தின் ரீமேக் என சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இதுகுறித்து இயக்குனர் சீனு ராமசாமி “இடிமுழக்கம் ரீமேக் படமல்ல. நானறிந்த தமிழ் சமூகத்தில் அன்றாடம் நடந்தேறும் பரப்பரப்பான கதை. இதற்கு நானும் எழுத்தாளர் ஜெயமோகனும் இணைந்து உரையாடல் எழுதியுள்ளோம்” என்றார். இந்நிலையில், சீனு ராமசாமி இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகியுள்ள ‘இடிமுழக்கம்’ படத்தின் ‘கானா விளக்கு மயிலே.’ மற்றும் ‘அடி தேனி சந்தையில்.’ ஆகிய இரண்டு குத்துப்பாடல்களின் லிரிக்கல் வீடியோவை இயக்குநர் சீனு ராமசாமி பகிர்ந்துள்ளார். வைரமுத்து எழுதியுள்ள ‘கானா விளக்கு மயிலே.’ என்கிற நாட்டுப்புறப் பாடலை ஆண்டனி தாசன் பாடியுள்ளார். என்.ஆர். ரகுநந்தன் இசையமைத்துள்ளார். மற்றொரு பாடலான ‘அடி தேனி சந்தையில்.’பாடலை லா. வரதன் எழுதியிருக்க ஆண்டனி தாசன் மற்றும் மீனாட்சி இளையராஜா பாடியுள்ளனர். ‘இடிமுழக்கம்’ திரைப்படம் தென் மாவட்டங்களை மையப்படுத்திய பழிவாங்கும் ஆக்சன் திரில்லர் கதை. இந்த படத்தில் ஜிவி பிரகாஷ் குமார் இறைச்சிக் கடை உரிமையாளராகவும், நடிகை காயத்ரி சங்கர் ஒரு செவிலியராகவும் நடித்துள்ளனர். விரைவில் இப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. வணக்கம் நண்பர்களே, ஜி.வி. பிரகாஷ் குமார், காயத்ரி சங்கர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, சரண்யா பொன்வண்ணன், எம்.எஸ். பாஸ்கர், கருப்பு ராஜா ( கஞ்சா கருப்பு) இசக்கி ரகு, பாடகர் அந்தோணி தாசன், அலன் டால்ஸ்டாய், வெற்றி குமரன், பில்லா டேவிட் காலஞ்சென்ற நடிகர் மாரிமுத்து மற்றும்… — Seenu Ramasamy (@seenuramasamy) July 26, 2026 முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/cinema/cinemanews/seenu-ramasamys-idimuzhakkam-film-two-songs-out




