புதுடெல்லி, ஜப்பானில் நடைபெறவுள்ள 2026 ஆசிய விளையாட்டு போட்டிகளுக்கான கிரிக்கெட் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. தங்க பதக்கம் 2010 (குவாங்சோ), 2014 (இன்சியான்) மற்றும் 2023 (ஹாங்சோ) தொடர்களைத் தொடர்ந்து, ஆசிய விளையாட்டு போட்டிகளில் கிரிக்கெட் இடம்பெறுவது இது 4-வது முறையாகும். கடந்த ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய ஆண்கள் மற்றும் மகளிர் அணிகள் தங்க பதக்கம் வென்று நடப்பு சாம்பியன்களாக உள்ளன. காலிறுதி இதில், ஆண்கள் அணிகளுக்கான போட்டிகள் செப்டம்பர் 24 முதல் அக்டோபர் 1-ம் தேதி வரையும் நடைபெறவுள்ளன. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகள் நேரடியாக காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனநிலையில், மீதமுள்ள 4 காலிறுதி இடங்களுக்காக 6 அணிகள் இரு பிரிவுகளாக போட்டியிடுகின்றன. இந்தியா, பாகிஸ்தான் அணிகள் நேரடியாக காலிறிதிக்கு தகுதிபெற்றுள்ளதால் இரு அணிகள் மோதும் போட்டி அரையிறுதி அல்லது இறுதிப்போட்டியில் மட்டுமே சாத்தியமாகும். இரு பிரிவு குழு 'ஏ': ஆப்கானிஸ்தான், ஜப்பான், நேபாளம். குழு 'பி': ஹாங்காங் சீனா, மலேசியா, ஓமன். இதில், ஒவ்வொரு குழுவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் காலிறுதி சுற்றுக்கு முன்னேறும். இந்திய ஆண்கள் அணி: ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), திலக் வர்மா, ரவி பிஷ்னோய், அபிஷேக் சர்மா, நிதிஷ் குமார் ரெட்டி, ஜஸ்பிரித் பும்ரா, சஞ்சு சாம்சன், அக்சர் படேல், ஹர்ஷித் ராணா, இஷான் கிஷன், வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப் சிங், சிவம் துபே, வருண் சக்கரவர்த்தி, வைபவ் சூரியவன்ஷி. நடப்பு சாம்பியனாக களமிறங்கும் இந்தியா, இந்த முறையும் தங்க பதக்கத்தை தக்கவைத்து கொள்ளும் முனைப்புடன் ஜப்பானில் களமிறங்கவுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/sports/cricket/asian-games-2026-cricket-schedule-released-india-and-pakistan-men-can-only-meet-if




