சென்னை, மேலே உள்ள புகைப்படத்தில் இருக்கும் நடிகையை உங்களால் அடையாளம் காண முடிகிறதா? அவர் தற்போது தமிழ், தெலுங்கு, மற்றும் மலையாளத் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். அவர் வேறுயாரும் இல்லை மமிதா பைஜுதான். பிரேமலு கேரள மாநிலம் கோட்டயம் அருகே உள்ள கிடங்கூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த இவர், குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமானார். தனது சிறு வயதிலேயே அற்புதமான நடிப்பால் அனைவரையும் கவர்ந்த இவர், 'பிரேமலு' திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக மிகப்பெரிய வெற்றியை பெற்றார். ரெபல் தொடர்ந்து ஜி.வி. பிரகாஷ் குமாருடன் 'ரெபல்' திரைப்படத்தில் நடித்தார். அப்படம் வணிக ரீதியாக பெரிய வெற்றி பெறாவிட்டாலும், இவரது நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் இதனைத் தொடர்ந்து பிரதீப் ரங்கநாதனுடன் 'டியூட்' (Dude), தனுஷுடன் 'கர' (Kara), விஜய்யுடன் ’ஜனநாயகன்’ மற்றும் சமீபத்தில் சூர்யாவுடன் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' (Vishwanath and Sons) ஆகிய படங்களில் நடித்தார். இதில் 'மேடி' என்ற கதாபாத்திரத்தில் இவர் வெளிப்படுத்திய நடிப்பு படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்தது. அதிர்ஷ்ட கதாநாயகி 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' திரைப்படம் வெளியான 2 நாட்களில் 100 கோடி ரூபாய் வசூல் செய்து சூப்பர் ஹிட்டாகி உள்ளது. இவ்வாறு வரிசையாக நூறு கோடி வசூல் தரும் திரைப்படங்களைக் கொடுத்து வரும் மமிதா பைஜு, தற்போது தென்னிந்திய சினிமாவின் அதிர்ஷ்ட கதாநாயகியாக உருவெடுத்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/cinema/cinemanews/does-casting-her-as-the-lead-guarantee-a-hit-the-young-actress-who-has-become-south-indias-lucky-heroine




