உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரைச் சேர்ந்தவர் ஆனந்த குமார். 2024-ம் ஆண்டு தனியார் கல்லூயிரியில் பி.டெக் முடித்த இவர், உத்தரப்பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல் கரங்களில் பட்டமும் கோல்ட் மெடலும் பெற்றார். கல்லூரி படிப்புக்குப் பிறகு அரசு வேலையில் சேர்வதில் ஆர்வம் காண்பித்த ஆனந்த் குமார், ரயில்வே, எஸ்.எஸ்.சி, வங்கிகள் மற்றும் கல்வித் துறை ஆகியவை நடத்திய ஆள்சேர்ப்புத் தேர்வுகளில் பங்கேற்றார். ஆனால் அவரால் வெற்றிபெற முடியவில்லை. கடந்த சில மாதங்களாக அவர் கடும் மன அழுத்தத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கிடையில், குடும்பத்தார்கள் ஆனந்த் குமாரின் அண்ணனுக்கு பெண் பார்க்க சொந்த ஊரான பீகாருக்குச் சென்றிருக்கின்றனர். அப்போது ஆனந்த குமார் மட்டும் வீட்டில் தனியாக இருந்திருக்கிறார். இந்த நிலையில், வீட்டு வேலைக்காக உதவி செய்ய வந்தப் பணிப்பெண் நீண்ட நேரம் கதவை தட்டியும் கதவு திறக்கவில்லை. உயிரிழந்த ஆனந்த் குமார் அதைத் தொடர்ந்து அக்கம் பக்கத்தினரிடம் தகவல் தெரிவித்திருக்கிறார். அதைத் தொடர்ந்து காவல்துறைக்கும் தகவலளிக்கப்பட்டிருக்கிறது. சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறை அதிகாரிகள், வீட்டுக் கதவை உடைத்து சோதனை செய்தபோது, வீட்டில் ஆனந்த குமார் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். காவல்துறையினரின் சோதனையில் ஒரு தற்கொலைக் கடிதம் கிடைத்தது. அதில், ``அப்பா 50 முறை அரசு வேலைக்காக முயற்சி செய்துவிட்டேன். ஆனால் என்னால் வெற்றிபெற முடியவில்லை. என்னை மன்னித்துவிடுங்கள். இனி என்னால் தோற்றவனாக வாழ முடியாது." என எழுதப்படிருக்கிறது. இந்த தற்கொலை குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறை, உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பியிருக்கிறது. மேலும், இந்த வழக்கு தொடர்பாக விசாரணனையும் தொடங்கியிருக்கிறது. தற்கொலை தடுப்பு மையம் நாடாளுமன்றத்தை நோக்கி 'CJP' இளைஞர்கள் பேரணி: இணையதள சேவை துண்டிப்பு; காவல்துறை தடியடி முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.vikatan.com/crime/a-young-man-committed-suicide-after-failing-a-government-examination-50-times



