சுற்றுலா செல்வது பலருக்கும் பிடித்தமான செயல்களில் ஒன்று. இதை விரும்பாதவர்கள் உலகில் யாரும் இருக்க மாட்டார்கள். பலர் ஆண்டு முழுவதும் உழைத்து வருடத்திற்கு ஒருமுறை பிடித்த இடங்களுக்கு சுற்றுலா செல்வது வழக்கம். இதனால் அவர்களின் மன அழுத்தங்கள் மாறி சந்தோஷமாக விடுமுறை நாட்களை கழிப்பர். சிலரோ சுற்றுலா செல்வதையே பொழுதுபோக்காக வைத்திருப்பார்கள். அவர்களுக்கு இதுவரை காணாத இடங்களுக்கு செல்ல வேண்டும், சில இடங்கள் எவ்வளவு தூரமாயினும் நடந்தே செல்ல வேண்டும், யாரும் செல்ல முடியாத இடங்களுக்கு போக வேண்டும் என்று பலவித ஆசைகள் இருக்கும். அப்படி சுற்றுலா சாகச விரும்பிகளுக்கு உயிர் பயம் காட்டும் வகையில் பூமியில் ஒருசில இடங்கள் உள்ளன. சாகச விரும்பிகளே அணுக முடியாத வகையில் இருக்கும் சில இடங்களை இந்த தொகுப்பில் காணலாம். 1.லா ரின்கோனாடா, பெரு கடல் மட்டத்திலிருந்து 16732 அடி உயரத்தில் அமைந்துள்ளது, லா ரின்கோனாடா பகுதி. இங்குள்ள மக்கள் கூட சில நேரங்களில் லா ரின்கோனாடாவில் நிலவும் காலநிலைக்கு வாழ கஷ்டப்படுகிறார்கள். காரணம் இந்த பகுதிக்கு செல்லும்போது, மனிதர்கள் சுவாசிப்பதற்கு கூட கடினமாக இருக்கும். இங்கு நிலவும் வானிலை ஆண்டு முழுவதும் உறைபனி நிலையைத் தொடும். இந்த இடத்திற்கு நுழைவதற்கும் வெளியேறுவதற்கும் பனிகட்டியாலான ஒரே வழியே உள்ளது. இதில் வாகனங்களில் கூட செல்ல முடியாத நிலையே காணப்படுகிறது. லா ரின்கோனாடா பூமியின் `சோகமான நகரம்’ என்றும் அழைக்கப்படுகிறது. 2.ட்ரோல்டுங்கா, நார்வே நார்வேயில் காணப்படும் இந்த இடம், `பூதத்தின் நாக்கு’ எனவும் அழைக்கப்படுகிறது. குன்றின் மீது கிடைமட்டமாக வெளியே நீண்டு இந்த பாறை அமைப்பு காணப்படுகிறது. இந்த இடத்தை அடைவதற்காக, சவாலான நிலப்பரப்பு வழியாக எட்டு முதல் 10 மணி நேரம் செல்ல வேண்டும். புகைப்படம் எடுப்பவர்களுக்கு இந்த இடம் அருமையானது. 3.எவரெஸ்ட் சிகரம், நேபாளம் உலகின் மிக உயரமான சிகரமான எவரெஸ்ட் சிகரத்தில் மலையேறுவது என்பது சவாலான விஷயங்களுள் ஒன்றாகும். இங்கு செல்வதற்கு உடல் தகுதி, தொழில்நுட்ப திறன் மற்றும் மன வலிமை ஆகியவை தேவை. அபாயங்கள் நிறைந்து இந்த இடம் காணப்படுகிறது, ஆனால் இதன் உயரமான இலக்கை அடைந்து விட்டால், அதனால் கிடைக்கும் சந்தோஷத்தை அளவிட முடியாது. 4.இட்டோகோர்ட்டூர்மிட், கிரீன்லாந்து இந்த இடத்தை அடைவதே ஒரு சாகசமாகும். வருடத்தில் 9 மாதங்களும் கடல் பனிக்கட்டியால் சூழ்ந்து காணப்படுவதால் கப்பலின் மூலம் இந்த நகரத்தை அடைவதே மிகவும் கடினமாக இருக்கும். இருப்பினும், பல ஆண்டுகளாக இது வனவிலங்கு ஆர்வலர்கள் மற்றும் கலாச்சார ஆய்வாளர்களுக்கான ஒரு முக்கிய சுற்றுலா தலமாக உருவெடுத்துள்ளது. 450 மக்கள் மட்டுமே வசிக்கும் இந்த நகரத்தில் வசிக்கிறார்கள். உள்ளூர்வாசிகளின் முக்கிய வருமானம் சுற்றுலா மற்றும் வேட்டையாடுதல் மூலமாகவே கிடைக்கிறது 5.டெத் வேலி தேசிய பூங்கா, கலிபோர்னியா டெத் வேலி தேசிய பூங்கா கலிபோர்னியாவில் அமைந்துள்ளது. டெத் வேலி என்ற பெயருக்கு ஏற்றவாறு அதிகபட்ச வெயிலையும், கடுமையான பாலைவன சூழலையும் கொண்டுள்ளது. கடுமையான வெப்பத்தைத் தாங்குவதற்கும், தொலைதூர வறண்ட நிலப்பரப்பில் செல்வதற்கும் இங்கு அசாத்திய திறமை தேவைப்படுகிறது. 6.வடக்கு யுங்காஸ் சாலை, பொலிவியா பொலிவியாவில் உள்ள வடக்கு யுங்காஸ் சாலை, உலகின் மிகவும் கொடுரமான பாதைகளில் ஒன்றாகும். செங்குத்தான மலையின் ஓரத்தில் பாதையானது செதுக்கப்பட்டுள்ளது, மிகவும் குறுகலான காணப்படும் சாலையில், அதிக அளவிலான ஹேர்பின் திருப்பங்கள் மற்றும் நீர் வீழ்ச்சிகள் காணப்படுகிறது. இந்த சாலையில் செல்லுபவர்களுக்கு ராட்டினத்தில் செல்வது போல இருக்கும் என கூறப்படுகிறது. 7.ஒகுனோஷிமா, ஜப்பான் "முயல் தீவு" என்று பிரபலமாக அறியப்படும் இந்த ஜப்பானிய தீவு ஒரு காலத்தில் இரசாயன ஆயுத தொழிற்சாலைகளுக்கு பிரபலமாக இருந்தது. சில ஆண்டுகளுக்கு முன்பு இணையதளத்தில் இந்த இடம் வைரலான பின்பு, தீவின் புகழ் உலகெங்கிலும் பரவியது. அதிகமான முயல்களால் நிறைந்து காணப்படும் இந்த தீவு பல சாகச வீரர்களின் பயண பட்டியலில் இடம்பிடித்துள்ளது. 8.நியு நியூசிலாந்திலிருந்து 1500 மைல்கள் தொலைவில் தென் பசிபிக் பகுதியின் நடுவில் இருக்கிறது இந்த இடம். மிகவும் அதிக தொலைவு இருப்பதே மக்கள் இங்கு செல்லாததற்கு காரணமாக சொல்லப்படுகிறது. இந்த இடம் பெரும்பாலும் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும். ஏனெனில் இங்கு திமிங்கலங்களைப் பார்க்கும் சுற்றுப்பயணங்கள், வெள்ளை மணல் கடற்கரைகள், குகைகள் நிறைந்து காணப்படுகின்றன. 9.பக்ராதல்சபிஜெல், ஐஸ்லாந்து ஐஸ்லாந்தில் உள்ள ஒரு எரிமலை ஆகும். இது தொடர்ச்சியாக வெடித்து எரிமலைக் குழம்பை வெளியேற்றிக் கொண்டே இருக்கிறது. பனியும் நெருப்பு குழம்பும் ஒரே இடத்தில் பார்க்கும் இடமாக திகழ்கிறது. சீரற்ற நிலப்பரப்பில் நடந்து பின்னர் மலையேற்றம் மூலம் இந்த இடத்தை அடையலாம். சாகச விரும்பிகளுக்கு இது ஏற்ற இடமாகும். 10.ப்ளூ ஹோல்,எகிப்து எகிப்தின் செங்கடலில் உள்ள ப்ளூ ஹோல் நீந்துபவர்களுக்கு ஒரு சொர்க்கமாகும், ஆனால் இது உலகின் மிகவும் சவாலான நீச்சல் தளங்களில் ஒன்றாகும். இதில் செல்வதற்கு சரியான திட்டமிடல் அவசியம். மேலும் நீச்சல் நிபுணர்களை கொண்டே இந்த இடத்தில் நீந்த வேண்டும். ஏனெனில் நீருக்கடியில் வளைவுகள், குகைகள், கணிக்க முடியாத அளவிற்கு நீரோட்டங்கள் இருக்கும். 11.கெர்குலென் தீவுகள், தெற்கு இந்தியப் பெருங்கடல் இந்த தீவுகளில் மக்கள் யாரும் வசிக்கவில்லை. ஆராய்ச்சிக்காக மட்டுமே சில விஞ்ஞானிகள் மட்டுமே வந்து செல்கின்றனர். தீவு பரந்த பனிப்பாறைகளால் மூடப்பட்டுள்ளது. மேலும் 300-க்கும் மேற்பட்ட தீவுகளால் சூழப்பட்டுள்ளது. 10 நாள் கப்பலில் பயணம் செய்தால் மட்டுமே இந்தத் தீவை அடைய முடியும். மேலும் கப்பல் வருடத்திற்கு நான்கு முறை மட்டுமே புறப்படும். 12.தனக்கில் பள்ளங்கள், எத்தியோப்பியா `பூமியின் மிகக் கொடூரமான இடம்’ என்று அழைக்கப்படும் இது, அதிக வெப்பம், செல்லும் இடங்களில் எல்லாம் உப்பு அடுக்குகள் மற்றும் செயலில் உள்ள எரிமலைகளுக்கு பெயர் பெற்றது. சகிப்பு தன்மை உள்ளவர்களுக்கே இந்த இடத்திற்கு செல்ல முடியும். அதீத வெப்பம் மற்றும் கடுமையான இடங்கள் சாகச பயணிகளை சோர்வுக்குள்ளாக்குகின்றன 13.வட துருவம், ஆர்க்டிக் பெருங்கடல் ஆர்க்டிக் பெருங்கடலின் வட துருவத்தை அடைவது மிகவும் சவாலான பயணமாகும். இதற்கு மிகப்பெரிய அளவிலான பனிக்கட்டியை கடந்து செல்ல வேண்டும். மைனஸ் டிகிரியை கடந்திருக்கும் உறைபனி வெப்பநிலையைத் தாங்குவது சவாலான இடமாக இதை ஆக்குகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/specials/interested-in-adventure-tourism-here-are-some-thrilling-destinations-for-you




