நகோயா, ஆசிய விளையாட்டு பெண்களுக்கான 20 ஓவர் கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இலங்கையை வீழ்த்தி இந்தியா தங்கம் வென்றது. இந்தியா - இலங்கை 20-வது ஆசிய விளையாட்டு போட்டியில் பெண்களுக்கான 20 ஓவர் கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இந்தியா - இலங்கை அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது. ஸ்மிருதி மந்தனா அதிரடி அதன்படி, தொடக்க வீராங்கனைகளாக களமிறங்கிய ஸ்மிருதி மந்தனா, ஷபாலி வர்மா ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தது. சிறப்பாக விளையாடிய ஸ்மிருதி மந்தனா 45 பந்துகளில் 79 ரன்கள் விளாசினார். ஷபாலி வர்மா 29 பந்துகளில் 48 ரன்கள் எடுத்தார். அதன்பின்னர் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 17 பந்துகளில் 19 ரன்கள் எடுத்து அவுடானார். இறுதிக்கட்டத்தில் ரிச்சா கோஷ் அதிரடியாக விளையாடி 22 பந்துகளில் 49 ரன்கள் குவித்தார். அவருடன் பார்த்தி புல்மாலி 7 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன் மூலம் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 216 ரன்கள் குவித்தது. 69 ரன்களில் சுருண்ட இலங்கை 217 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணிக்கு இந்திய பந்துவீச்சாளர்கள் தொடக்கம் முதலே அதிர்ச்சி கொடுத்தனர். கேப்டன் சமாரி அதபத்து மட்டும் 21 பந்துகளில் 29 ரன்கள் எடுத்தார். கவிஷா தில்ஹாரி 13 பந்துகளில் 11 ரன்கள் எடுத்தார். மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இறுதியில் இலங்கை அணி 15.4 ஓவர்களில் 69 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் இந்தியா 147 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது. இந்திய அணியில் தீப்தி சர்மா 3 விக்கெட்டுகளும், ஷ்ரேயங்கா பாட்டீல், ஸ்ரீ சரணி மற்றும் ஷபாலி வர்மா தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/sports/cricket/asian-games-womens-cricket-india-wins-gold-by-defeating-sri-lanka




