பழனி முருகன் கோவிலுக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள 1.41 ஏக்கர் நிலத்தை தனியார் இருவர் பதிவு செய்துள்ளனர். இதுபற்றி இரண்டு அமைச்சர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசி வருகின்றனர். இந்த நிலம் கோவிலுக்கு சொந்தமானது, இதை பதிவு செய்ய கூடாது என சார்பதிவாளர் அலுவலகத்திற்கு கோவில் தரப்பில் இருந்து ஏற்கனவே கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த தி.மு.க. ஆட்சியில் தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த நிலத்தை கைப்பற்றி கோவில் கார் பார்க்கிங்கிற்காக பயன்படுத்தப்பட்டது. ஆனால் இந்த நிலம் இப்போது திடீரென தனியார் பெயரில் பதிவு செய்யப்பட்டது அதிர்ச்சியளிக்கிறது. இதன் பின்னால் சதி நடந்துள்ளது. பினாமி பெயரில் பத்திரப்பதிவு நடந்துள்ளது. பழனிக்கே மொட்டை இந்துக்களுக்கு எதிரி என்று எங்களின் மீது போலியாக அவதூறு பரப்பினார்கள். ஆனால் எங்களின் தி.மு.க. ஆட்சியில் இந்த இடம் பாதுகாக்கப்பட்டது. ஆனால் இந்த ஆட்சியில் நிலம் தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டுள்ளது. பழனிக்கு மொட்டை போடுவாங்க என்று தான் நாமெல்லாம் பார்த்தோம். ஆனால் பழனிக்கே விஜய் ஆட்சி மொட்டை போட்டுள்ளது. நீதிமன்றம் செல்வோம் தூய்மையான ஆட்சி என்று சொல்லக்கூடிய விஜய் அரசாங்கம் இன்றைக்கு கோவிலோட நிலத்தை இன்னொருத்தருக்கு ‘ரிஜிஸ்டர்’ பண்ணி கொடுத்துருக்கும்போது, நீங்க எப்படி எங்களை பார்த்து குற்றம் சுமத்த முடியும்? மக்கள் முன்னாடி வந்து உண்மையாக பேசணுமே தவிர, தேவையில்லாத அரசியல் சர்ச்சைகளை உருவாக்கி பிரச்சினைகளை திசை திருப்புவதற்காக மட்டுமே அமைச்சர் பிரஸ் மீட் நடைபெற்றிருக்கிறது.வழக்கு விசாரணை சரியாக நடைபெறவில்லை என்று சொன்னால், தி.மு.க. இது குறித்து நீதிமன்றத்திற்கு செல்வதற்கு தயங்காது. இவ்வாறு அவர் கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/palani-murugan-temple-land-scam-major-conspiracy-dmk-allegation




