பூந்தமல்லி - வடபழனி சென்னையில் 118.9 கிலோ மீட்டர் தொலை வுக்கு 3 வழித்தடங்களில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டப் பணிகள் நடந்து வருகிறது. இதில், கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி வரையிலான வழித்தடத்தில் (26 கிலோ மீட்டர்) வட பூந்தமல்லி - போரூர் வரையிலான 10 கிலோ மீட்டர் தொலைவுக்கு பணிகள் முடிந்து மெட்ரோ ரெயில் சேவையை தொடங்குவதற்கான பாதுகாப்பு சான்றிதழை ரெயில்வே வாரியம் வழங்கியது. இதேபோல, போரூர் பழனி இடையில் அனைத்துப் பணிகளும் முடிவடைந்து கடந்த ஜனவரி மாதம் 11-ந்தேதி வெற்றிகரமாக சோதனை ஓட்டம் நடத்தி பார்க்கப்பட் டது. அப்போது, சிக்னல் அமைப்பு, தண்டவாள செயல்திறன், ரெயில் இயக் கம், உறுதித்தன்மை உள்ளிட்டவைகள் பரிசோதிக்கப்பட்டது. இதனால், பூந்தமல்லி - வடபழனி இடையில் மெட்ரோ ரெயிலை இயக்குவதற்கான அனைத்து சோதனை பணிகளையும் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவ னம் முடித்தது. இதைத்தொடர்ந்து, ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் இவ்வழித்தடத்தில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் இவ்வழித்தடத்தில் ரெயிலை இயக்குவதற்கான ஒப்புதலும் கிடைத்தது. பிரதமர் தொடங்கி வைக்கிறார் கடந்த பிப்ரவரி மாதமே பூந்தமல்லி - வடபழனி வரையில் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் தரப்பில் பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்ட நிகழ்ச்சி தேதிக்கான அனுமதி கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டு வந்தது. இதனால், அனைத்து பணிகள் முடிந்த நிலையிலும் பூந்தமல்லி - வடபழனி இடையே மெட்ரோ ரெயில் சேவையை தொடங்குவதிலும் கால தாமதம் ஏற்பட்டது. இந்த நிலையில், வரும் அக்டோபர் 11-ந்தேதி பூந்தமல்லி - வடபழனி இடையிலான மெட்ரோ ரெயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைக்க இருப்பதாக சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் தரப்பில் தெரி விக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் சென்னை ஐ.ஐ.டி.யில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொள்கிறார். அப்போது, 3 தேசிய நெடுஞ்சாலைத் திட்டப் பணிகளையும், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் திட்டப் பணிகளையும் தொடங்கி வைக்கிறார். முதல் வழித்தடம் பின்னர், பூந்தமல்லி - வடபழனி இடையிலான மெட்ரோ ரெயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்து, மெட்ரோ ரெயிலில் பயணம் செய்ய உள்ளார். மெட்ரோ ரெயில் சேவை தொடக்க விழாவில், பிரதமர் மோடி, முதல்-அமைச்சர் விஜய் ஆகியோர் ஒரே மேடையில் கலந்துகொள்ள இருக்கின்றனர். 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டத்தில் பூந்தமல்லி - வடபழனி வழித்தடம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் முதல் சேவை ஆகும். மொத்தம் 14.64 கிலோ மீட்டர் தூரத்தில் 11 உயர்மட்ட மேம்பாலங்கள் அமைந்துள்ளன. இச்சேவை பயன்பாட்டுக்கு வரும் போது பூந்தமல்லி - வடபழனி இடையே போக்குவரத்து நெரிசல் பெருமளவில் குறையும் என மெட்ரோ ரெயில்வே உயர் அதிகாரி ஒருவர் தெரி வித்தார். வடபழனியில் தொடங்கி போரூர் சந்திப்பு, போரூர் பைபாஸ், தெள்ளியகரம், காட்டுப்பாக்கம், குமணன்சாவடி, கரையான்சாவடி, முல்லைத் தோட்டம், பூந்தமல்லி, பூந்தமல்லி பைபாஸ் ஆகிய 11 வழித்தடங்கள் இதில் இடம்பெறும் என்று சொல்லப்படுகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/prime-minister-modi-to-visit-chennai-on-october-11-to-inaugurate-the-poonamallee-metro-rail-service




