குமரி, தோவாளை மார்க்கெட் தோவாளையில் புகழ்பெற்ற பூ மார்க்கெட் உள்ளது. தினமும் இந்த மார்க்கெட்டில் பல விதமான பூக்கள் பல்வேறு இடங்களிலிருந்து வந்து குவிகின்றன. சிறு வியாபாரிகள் முதல் பெரிய வியாபாரிகள் வரை பூக்களை வாங்கி விற்பனை செய்து வருகின்றனர். இங்கிருந்து பூக்கள் உள்ளூர் மட்டுமன்றி வெளி மாவட்டங்களுக்கும், அண்டை மாநிலமான கேரளத்திற்கும் விற்பனையாகின்றன. இங்கு பண்டிகை, கோவில் திருவிழா, முகூர்த்தம் உள்ளிட்ட நாட்களில் பூக்களின் விலை உயர்ந்தும், விழாக்கள் இல்லாத நாட்களில் குறைவாகவும் இருக்கும். குறிப்பாக ஓணம் மற்றும் சரஸ்வதி பூஜை நாட்களில் பூக்களின் விலை மிக அதிகமாக இருக்கும். மேலும், ஓணம் பண்டிகையையொட்டி வெளியூர்களிலிருந்து ஆயிரக்கணக்கான டன் பூக்கள் வந்து குவியும். அவை அனைத்தும் 2 நாட்களில் விற்று தீர்ந்துவிடும். வருடத்தில் ஒரு நாள் மட்டும் இந்த மார்கெட்டில் இரவு ஓணம் பண்டிகை சிறப்பு விற்பனை நடை பெறும். 1,000 டன் பூக்கள் விற்பனை இந்த ஆண்டு ஓணம் பண்டிகை நாளை (புதன்கிழமை) கொண்டாப்படுகிறது. இதனால் தோவாளை மார்க்கெட் களை கட்டி உள்ளது. பூக்கள் வெளியூர்களிலிருந்து டன் கணக்கில் வந்து விற்பனையாகி கொண்டிருக்கிறது. இதையொட்டி ஆண்டுக்கு ஒருநாள் நடைபெறும் ஓணம் சிறப்பு விற்பனை நேற்று இரவு 11 மணிக்கு தொடங்கி விடிய விடிய நடைபெற்றது. இதுகுறித்து பூ வியாபாரிகள் சங்கத்தலைவர் கிருஷ்ணகுமார் கூறியதாவது:- ஓணம் பண்டிகையையொட்டி வெளியூர்களில் இருந்து முன்பதிவு செய்யப்பட்ட கிரேந்தி, செவ்வந்தி, ரோஜா, அரளி உள்ளிட்ட கலர் பூக்கள் 2 நாட்களாக 1,000 டன் வந்து மார்க்கெட் டில் வந்து குவிந்தன. அவை அனைத்தும் நேற்று ஒரே நாளில் விற்பனையானது. மேலும் உள்ள பூக்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) பகல் முழுவதும் விற்பனையாகிவிடும். கேரளத்தில் இருந்து வருகை தந்த வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் பூக்களை வாங்கி செல்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/onam-festival-1000-tonnes-of-flowers-sold-in-a-single-day-at-thovalai-market




