கன்னியாகுமரி, 15 டன் எடையில் ஒரே கல்லில் உருவாக்கப்பட்ட 11 அடி உயர கிருஷ்ணர் சிலை குமரியில் இருந்து லாரி மூலம் நெல்லைக்கு அனுப்பி வைக் கப்பட்டது. கிருஷ்ணர் சிலை குமரி மாவட்டம் மயிலாடியில் ஏராளமான சிற்பக்கூடங்கள் உள்ளன. இங் குள்ள சிற்பக்கூடத்தில் இருந்து ஏராளமான சாமிசிலைகள் செய்யப்பட்டு உள்நாடு மற்றும் வெளிநாட்டுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. மயிலாடி சிற்பம் புவிசார் குறியீடு பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் மயி லாடி சேந்தன்புதூர் பகுதியை சேர்ந்த சிற்பி சுப்பிரமணியன் ஆசாரியின் சிற்பக்கூடத்தில் 15 டன் எடையுள்ள ஒரே கல்லில் கிருஷ்ணர் சிலை வடி வமைக்கப்பட்டுள்ளது. இது 11 அடி உயரமும், 32 அடி அகலத்தில் கிருஷ்ணர் சிலையை த்ரூபமாக கடந்த 8 மாதங்களாக தொழிலாளர்கள் வடிவமைத்தனர். புதிய கோவிலுக்கு. திருநெல்வேலி டவுனில் புதியதாக கட்டப்பட உள்ள கிருஷ்ணசாமி கோவிலுக்கு அனுப்புவதற்காக இந்த சிலை வடிவமைக்கப்பட்டது. அந்த கோவிலில் இந்த சிலை நிறுவப்பட உள்ளது. அதன்படி கிருஷ்ணர் சிலையை நெல்லைக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. அதன்படி மயிலாடியில் சிற்ப கலைஞர்கள் சாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர். பின்னர் 10 சக்கரம் கொண்ட கனரக லாரியில் சிலையை கிரேன் மூலம் ஏற்றி நெல்லைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சாமி சிலையை காண அங்கு ஏராளமான பக்தர்கள் திரண்டு பார்வையிட்டனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/an-11-foot-tall-statue-of-lord-krishna-carved-from-a-single-stone




