ரீல் நாயகனில் இருந்து நிஜமான தலைவனாக புதிய எடுத்துக்காட்டாக மாறியுள்ளீர்கள் என்று நடிகை ஸ்வாதி முதல்-அமைச்சர் விஜய்யை பாராட்டியுள்ளார். கேவிஎன் புரடக்ஷன்ஸ் தயாரிப்பில் எச். வினோத் இயக்கத்தில் நடிகராக முதல்-அமைச்சர் விஜய் நடித்த கடைசி திரைப்படமாக ‘ஜன நாயகன்’ நேற்று உலகெங்கும் வெளியானது. இந்தப் படம் தணிக்கைச் சான்றிதழ் பிரச்னையால் தாமதமாக வெளியானது. கடந்த 1995-ம் ஆண்டு எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான தேவா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஸ்வாதி. விஜய் நாயகனாக நடித்திருந்த இந்த படம் பெரிய வெற்றிப்படமாக அமைத்தது. அதன்பிறகு, தனது 2-வது தமிழ் படமாக அஜித்துடன் வான்மதி படத்தில் நடித்திருந்தார். இந்த படமும் அவருக்கு வெற்றியாக அமைந்தது. தொடர்ந்து விஜயுடன் வசந்த வாசல், செல்வா, ஆகிய படங்களில் நடித்திருந்தார். தமிழ் மட்டும் இல்லாமல் கன்னடா, தெலுங்கு ஆகிய மொழிகளில் பல வெற்றிப்படங்களில் நடித்துள்ள நடிகை ஸ்வாதி, வானத்தைப்போல படத்தின் கன்னட ரீமேக்கில் கௌசல்யா நடித்த கேரக்டரில் நடித்திருந்தார். கடைசியாக 2009-ம் ஆண்டு, அமீர் நடிப்பில் வெளியான யோகி என்ற படத்தில் நடித்திருந்த சுவாதி, அதன்பிறகு சினிமாவில் நடிக்காத நிலையில், தற்போது சின்னத்திரை தொடர்களில் நடித்து வருகிறார். ஸ்வாதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “தளபதி விஜய்யுடனான பழங்காலத்து நினைவுகளை மீட்டெடுத்தல் என்பது பொக்கிஷமானது. என்னுடைய பழைய ஆல்பங்களில் பார்க்கும்போது இந்த அழகான ஞாபங்கள் கிடைத்தன. சில தருணங்கள் உண்மையிலேயே காலத்தால் அழியாதது. என்னுடைய முதல் படத்தில் உங்களுடன் இருந்து, உங்களின் கடைசி படமான ஜனநாயகன் வரைக்குமான திரைப் பயணத்துக்கு எனது இதயப்பூர்வமான வாழ்த்துகள். மிகப்பெரிய வெற்றிக்கு வாழ்த்துகள். நடிகரில் இருந்து முதல்வர் வரைக்கும் உங்களது அற்புதமான பயணத்தைப் பார்த்து உத்வேகம் பெற்றுள்ளேன். உங்களது வெற்றி கடின உழைப்பு, விடாமுயற்சி, மீண்டெழுதல் போன்றவற்றின் பிரதிபலிப்பாக இருக்கிறது. கணக்கில்லாத சவால்கள் இருந்தும், நீங்கள் ஒருபோதும் விட்டுக் கொடுத்ததில்லை. இன்று, மிகப்பெரிய மைல்கல்லையும் எட்டியுள்ளீர்கள். திரையில் முழுமையான என்டர்டெயினர். இன்று, உங்களை மக்களுக்காக அர்பணித்துள்ளீர்கள். மிகப்பெரிய பொறுப்பை ஏற்றுள்ளீர்கள். திரைத்துறை, அரசியலில் மிளிருவது சாதாரண சாதனையல்ல; ரீல் நாயகனில் இருந்து (ரியல்) நிஜமான தலைவனாக புதிய எடுத்துக்காட்டாக மாறியுள்ளீர்கள். இந்தக் குறிப்பிடத்தக்க சாதனைக்கு மனமார்ந்த வாழ்த்துகள் முதல்வர் சார். உங்களது புதிய வாழ்க்கையிலும் வெற்றியடைய வாழ்த்துகள். உங்களை நேரில் சந்தித்து வாழ்த்து சொல்ல ஆவலுடன் காத்திருக்கிறேன். எனது நண்பர்களும் உலகெங்கும் உள்ள ரசிகர்களும் நான் எப்போது உங்களைச் சந்திப்பேன் எனக் கேட்கிறார்கள். அந்த நாள் விரைவில் வருமென நினைக்கிறேன். மனமார்ந்த மரியாதை மற்றும் வாழ்த்துகள் எப்போதுமே” என கூறியுள்ளார். View this post on Instagram முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/cinema/cinemanews/actress-swathi-shares-memories-with-chief-minister-vijay




