கைவிடப்பட்ட 35 பெண் குழந்தைகளுக்கு அப்பாவாக மாறியுள்ளார் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு சாதாரண விவசாயி. அவர்தான் ஹரே ராம் பாண்டே. அவரது மனிதநேயப் பயணம் 2004-ஆம் ஆண்டு தொடங்கியது. அன்று தேவ்கர் மாவட்டத்தில் உள்ள ஒரு புதரில், எறும்புகள் கடித்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த ஒரு பெண் குழந்தையைக் கண்டார். உடனடியாக அந்தக் குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தார். சிகிச்சைக்கான செலவைச் சமாளிக்கக் கடன் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஹரே ராம் பாண்டேZero FIR: குற்றம் நடந்தது ஓர் இடத்தில் என்றாலும், வேறு இடத்தில் புகாரளிக்கலாம்; என்ன நடைமுறை இது? அந்தச் சிறுமிக்கு தப்ஸி என்று பெயர் சூட்டி, தனது மகளாக ஏற்றுக்கொண்டார். அந்த ஒரு சம்பவம் அவரது வாழ்க்கையின் திசையையே மாற்றியது. அதன் பிறகு, பெற்றோரால் கைவிடப்பட்ட பல பெண் குழந்தைகளை ஒவ்வொருவராகத் தத்தெடுத்து வளர்க்கத் தொடங்கினார். இன்று அவர் 35 பெண் குழந்தைகளுக்கு உணவு, உடை, கல்வி, இருப்பிடம், பாதுகாப்பு மற்றும் எல்லாவற்றுக்கும் மேலாக அன்பான குடும்பச் சூழலை வழங்கி வருகிறார். இந்தக் குழந்தைகளின் நலனுக்காக நாராயண் சேவா ஆசிரமம் என்ற அமைப்பைத் தொடங்கினார். குழந்தைகளின் எதிர்காலத்துக்காகத் தனது சொந்த நிலங்களையும் சொத்துகளையும் விற்றார். தேவையானபோது கடன் வாங்கவும் பின்னடையவில்லை. இந்த மனிதநேயப் பணி பரவலான கவனம் பெற்றது பிரபல வினாடி-வினா நிகழ்ச்சியான ‘கௌன் பனேகா குரோர்பதி’யில் தனது மகள்களுடன் கலந்துகொண்டபோது. நாடு முழுவதும் அவரது சேவை பேசப்பட்டது. அதன் பின்னர் பல தனிநபர்களும் அமைப்புகளும் உதவிக்கு முன்வந்தனர். “இந்தச் செயல்களுக்குப் பின்னால் என் மனைவி பவானி குமாரியின் பங்கு மிகப்பெரியது. குழந்தைகளை அன்புடன் பார்த்துக்கொள்வது அவர்தான். அவர்தான் என் முதுகெலும்பு” என்று ஹரே ராம் பாண்டே ஒரு நேர்காணலில் உணர்ச்சிபூர்வமாகக் கூறியுள்ளார். குழந்தைமேற்கு நாடுகளில் எறும்பை வேடிக்கை பார்ப்பது ஒரு 'Hobby' - என்னது, ஒரு எறும்பின் விலை ரூ.21,000-ஆ? குழந்தைகளுக்குச் சரியான அடையாள ஆவணங்கள் கிடைக்க வேண்டும் என்பதற்காக, அவர்களின் ஆதார் அட்டைகளில் தனது பெயரையே தந்தை பெயராகப் பதிவு செய்துள்ளார். ரத்த உறவு இல்லாவிட்டாலும், உண்மையான அன்பு இருந்தால் ஒருவர் பல குழந்தைகளின் வாழ்க்கையை முழுமையாக மாற்ற முடியும் என்பதை ஹரே ராம் பாண்டே தனது வாழ்க்கையின் மூலம் நிரூபித்துக் காட்டியுள்ளார். இன்று அவரால் வளர்க்கப்பட்ட பல மகள்கள் நல்ல படிப்பு மற்றும் வேலைகளில் சிறப்பாக உள்ளனர். அவர்களின் புன்னகையும் வெற்றியுமே ஹரே ராம் பாண்டேவின் மிகப்பெரிய சொத்து. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.vikatan.com/features/human-stories/hare-ram-pandey-becomes-father-figure-to-35-abandoned-girls




