பிரிட்ஜ் டவுன், நியூசிலாந்து கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இத்தொடரில் 4 போட்டிகள் ஏற்கனவே நிறைவடைந்த நிலையில் இதில் 3-1 என்ற கணக்கில் தொடரை நியூசிலாந்து ஏற்கனவே கைப்பற்றிவிட்டது. இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 5வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி பார்படாஸ் நாட்டின் பிரிட்ஜ் டவுன் நகர மைதானத்தில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. 269 ரன்கள் இலக்கு இதையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 268 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியில் அதிகபட்சமாக டாம் லாதம் 69 ரன்களையும், நிக் கெலி 64 ரன்களையும் குவித்தனர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அதிகபட்சமாக அல்சாரி ஜோசப், விட்டல் லாவிஸ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். வெஸ்ட் இண்டீஸ் வெற்றி இதையடுத்து 269 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் 47.3 ஓவரில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 269 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் நியூசிலாந்தை 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் வெற்றிபெற்றது. சிறப்பாக ஆடிய அந்த அணியின் ஹெட்மயர் 69 ரன்களும், ருதர்போர்டு 61 ரன்களும் குவித்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தனர். இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றிபெற்றபோதும் 5 போட்டிகள் கொண்ட தொடரை நியூசிலாந்து 3-2 என்ற புள்ளிகள் கணக்கில் கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/sports/cricket/last-odi-west-indies-beat-new-zealand




